தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சம்பளம் 27% குறைக்கப்பட்டது; $11.2 மில்லியன் ஈட்டினார் பியூஷ் குப்தா

1 mins read
161865ef-a9a7-4f5e-a1e1-da5042106888
டிபிஎஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் குப்தா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2022ஆம் ஆண்டில் டிபிஎஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் குப்தாவின் ஆண்டு வருமானம் $15.4 மில்லியன்.

2023ஆம் ஆண்டில் அவரது ஆண்டு வருமானம் 27 விழுக்காடு குறைக்கப்பட்டது.

அவர் $11.2 மில்லியன் ஈட்டினார்.

2023ஆம் ஆண்டில் டிபிஎஸ் மின்னிலக்கச் சேவைகளில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக திரு குப்தாவின் சம்பளமும் குழுமத்தின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த மற்றவர்களின் சம்பளமும் குறைக்கப்படும் என்று பிப்ரவரி மாதத்தில் டிபிஎஸ் வங்கி அறிவித்திருந்தது.

“பல முக்கிய அம்சங்களில் டிபிஎஸ் வங்கி சிறப்பாகச் செயல்பட்டது. ஆனால் தொழில்நுட்ப மீள்திறனில் அதன் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை,” என்று டிபிஎஸ் அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்