சிஓஇ கட்டணங்கள் அதிகரிப்பு

சிஓஇ கட்டணங்கள் அதிகரிப்பு

1 mins read
d3a95def-7b74-4447-90b5-1bae45e71782
மற்ற பிரிவுகளைவிட சிறிய வகை கார்களுக்கான சிஓஇ கட்டணம் ஆக அதிகமாக ஏற்றம் கண்டது. அப்பிரிவின் கட்டணம் 8.1 விழுக்காடு அதிகரித்து $83,000ஆகப் பதிவானது. - படம்: சாவ்பாவ்

பெரிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணத்தைத் தவிர, மற்ற பிரிவுகளுக்கான சிஓஇ கட்டணங்கள் அதிகரித்துள்ளன.

பெரிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் $990 குறைந்து $96,010ஆகப் பதிவானது.

மற்ற பிரிவுகளைவிட சிறிய வகை கார்களுக்கான சிஓஇ கட்டணம் ஆக அதிகமாக ஏற்றம் கண்டது.

அப்பிரிவின் கட்டணம் 8.1 விழுக்காடு அதிகரித்து $83,000ஆகப் பதிவானது.

பொதுப் பிரிவுக்கான சிஓஇ கட்டணம் 1.1 விழுக்காடு அதிகரித்து $95,010ஆகப் பதிவானது.

இப்பிரிவை மோட்டார் சைக்கிள் இல்லாத மற்ற எல்லாப் பிரிவுகளுக்கும் பயன்படுத்தலாம்.

ஆனால் இது பெரும்பாலும் பெரிய கார்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

மோட்டார் சைக்கிள்களுக்கான சிஓஇ கட்டணம் 5.5 விழுக்காடு அதிகரித்து $9,400ஆக உயர்ந்தது.

சரக்கு வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் 3.6 ஏற்றம் கண்டு $75,599ஆகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்