மோசடி மின்னஞ்சல்: சிங்கப்பூர் சுங்கத்துறை எச்சரிக்கை

சிங்கப்பூர் சுங்கத்துறையின் பெயரில் பொதுமக்களுக்கு மோசடி மின்னஞ்சல்கள் வரத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து விழிப்பாக இருக்கும்படி சுங்கத்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.

“மோசடிப் பேர்வழிகள் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் சுங்கத்துறையின் தலைமை இயக்குநரான டான் ஹங் ஹூய் அல்லது அத்துறையின் மூத்த அதிகாரிகள் அனுப்புவது போல மக்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகின்றனர்,” என மார்ச் 4ஆம் தேதி சுங்கத்துறை தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

“இதுபோன்ற மின்னஞ்சல்கள் எதுவும் சுங்கத்துறை அதிகாரிகளால் அனுப்பப்படவில்லை. சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் போல் தங்களை அடையாளப்படுத்திகொண்டு, மோசடிகளில் ஈடுபடுபவர்களிடம் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என மேலும் அந்தப் பதிவில் சுங்கத்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.

சுங்க அதிகாரிகள் அதிகாரப்பூர்வ கடிதங்களை ஜிமெயில், யாகூ போன்ற தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்குகள் அல்லது பிற அதிகாரப்பூர்வமற்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பமாட்டார்கள் என்றும் அது கூறியது.

“@customs.gov.sg” என முடிவடையும் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிகளில் மட்டுமே சுங்கத்துறை பொதுமக்களைத் தொடர்புகொள்ளும் என அது குறிப்பிட்டது.

ஏதேனும் சந்தேகம் இருந்தால், customs_feedback@customs.gov.sg என்ற முகவரியைத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களை அது கேட்டுகொண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!