‘சிலேத்தார் மால்’ $550 மி.க்கு விற்கப்பட்டது

‘சிலேத்தார் மால்’ $550 மி.க்கு விற்கப்பட்டது

1 mins read
b7408fe9-b8db-4130-811b-bd64ecfee840
சிலேத்தார் மால் கடைத்தொகுதி செங்காங் வெஸ்ட் பகுதியில் உள்ளது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிலேத்தார் மால் கடைத்தொகுதியை ‘அல்கிரீன் பிராப்பர்டீஸ்’ சொத்து நிறுவனம் 550 மில்லியன் வெள்ளிக்கு வாங்கியுள்ளது.

கஸ்கன் பீக் முதலீட்டு நிறுவனத்திடமும் யுனைடெட் இன்ஜினியரிங் நிறுவனத்திடமும் இருந்த அந்த கடைத்தொகுதியை ‘அல்கிரீன் பிராப்பர்டீஸ்’ சொத்து நிறுவனம் வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிலேத்தார் மால் கடைத்தொகுதி செங்காங் வெஸ்ட் பகுதியில் உள்ளது. அது ஃபெர்ன்வேல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது. 

கடைத்தொகுதியின் ஒரு சதுர அடி 2,900 வெள்ளிக்கு விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

‘அல்கிரீன் பிராப்பர்டீஸ்’ சொத்து நிறுவனம் இன்னும் சில மாதங்களில் பாசிர் ரிஸ் கடைத்தொகுதியை திறக்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்