தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமானத்தில் S$100,000 திருட்டு;சீன நாட்டவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
abde6366-2e0b-4c11-bfc7-a9f0aec46714
ஏறக்குறைய $80,000 மதிப்புள்ள பல நாட்டு நாணயங்கள் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. - கோப்புப் படம்: சிங்கப்பூர் காவல்படை

விமானத்தில் இருந்தபோது பயணி ஒருவரின் பையிலிருந்து $100,000க்கும் அதிகமாக திருடிய சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட 54 வயது ஆடவர் மீது வியாழக்கிழமை (மார்ச் 7) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

மார்ச் 5ஆம் தேதி ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் வந்த சிங்கப்பூர் ஏர்லைன்சில் பயணி ஒருவரின் மஞ்சள் பையிலிருந்து சீன நாட்டவரான பெங் ஹுய் பணத்தைத் திருடியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் நீதிமன்றத்தில் தம்மீது சுமத்தப்பட்ட திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மார்ச் 6ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் பாதிக்கப்பட்ட பயணி 80,000 யுஎஸ் டாலர் ($107,000) இழந்ததை உணர்ந்ததாக காவல்துறை தெரிவித்தது.

பெங் ஹுய் பீப்பள்ஸ் பார்க் காம்பிளக்ஸ் கடைத்தொதியில் S$37,897.70 பெறுமானமுள்ள பணத்தை அனுப்புவதற்கு நான்கு பரிவர்த்தனைகளைச் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

அது, விமானத்தில் திருடப்பட்ட பணமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்