பொதுச் சுகாதார அச்சுறுத்தல்களை சமாளிக்க தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தில் திருத்தம்

பல்வேறு தீவிரத்தன்மை கொண்ட பொதுச் சுகாதார அச்சுறுத்தல்களை வெவ்வேறு வழிகளில் சமாளிக்கும் திறனை சிங்கப்பூர் உயர்த்த உள்ளது.

அதற்காக தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. திருத்தப்பட்ட அந்தச் சட்டம் வியாழக்கிழமை (மார்ச் 7) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

கொவிட்-19 பெருந்தொற்று இந்த விழிப்புநிலைக்கு அடித்தளம் இட்டது.

தொற்றுநோய் நிலைமை கூடியபோது அதனைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் அதிகரித்தது.

அச்சுறுத்தல் தணிந்ததும் நடவடிக்கைகளின் தீவிரத்தன்மையும் குறைந்தது என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

திருத்தப்பட்ட சட்டம், பெருந்தொற்றின் வெவ்வேறு காலகட்டத்திற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க சுகாதார அமைச்சருக்கு அதிகாரம் வழங்குகிறது.

அமைதியான நிலை அல்லது அவசர நிலையில் உதவுவதைக் காட்டிலும் ‘பொதுச் சுகாதார அச்சுறுத்தல்’ என்னும் இடைநிலை அறிவிப்பு ஏற்பாடு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கெனவே நடப்பில் உள்ள ‘பொதுச் சுகாதார அவசரநிலை’ என்னும் ஏற்பாட்டுக்குக் கூடுதலாக இந்தப் புதிய முறை அமையும்.

கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கை) சட்டம் பகுதி 7ன்கீழ் அளிக்கப்பட்ட சில அதிகாரங்களை இந்த மாற்றங்கள் உள்ளடக்கும். பெருந்தொற்று பரவிய காலத்தில் ‘சர்க்கிட் பிரேக்கர்’ போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வகை செய்த இந்தச் சட்டம் வரும் ஏப்ரல் மாதத்துடன் காலாவதியாகிறது.

இந்த விவரங்களை மன்றத்தில் தெரிவித்த அமைச்சர் ஓங், தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டார்.

“2023 மார்ச் மாதம் வெளியிடப்பட்ட சிங்கப்பூரின் கொவிட்-19 சமாளிப்பு தொடர்பான வெள்ளை அறிக்கையின் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று இச்சட்டம் மறுஆய்வு செய்து திருத்தப்பட வேண்டும் என்பது,” என்றார் அவர்.

இதற்கு முன்னர், பொதுச் சுகாதார அவசரநிலையை அறிவிக்க மட்டுமே இச்சட்டத்தில் வழிவகை இருந்தது.

ஆனால், கொவிட்-19 பெருந்தொற்று பரவிய காலத்தில், ஒட்டுமொத்த சுகாதாரப் பராமரிப்பு முறையில் மிதமிஞ்சிய நிலைமையுடன் தொடர்புடைய நெருக்கடி என்னும் நிலைமை ஏற்படாததால், அவசரநிலை அறிவிப்புக்கான அவசியம் ஏற்படவில்லை.

தற்போது தொற்றுநோய் தடுப்புச் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் பொதுச் சுகாதார அவசரநிலை அல்லது பொதுச் சுகாதார அச்சுறுத்தல் - நிலைமைக்கு ஏற்ப இவற்றில் ஏதேனும் ஒன்றை சுகாதார அமைச்சர் அறிவிக்க முடியும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!