ஆஸ்திரேலியாவில் சிங்டெல் துணை நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீண்டும் தள்ளுபடி

ஆஸ்திரேலியாவில் சிங்டெல் துணை நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீண்டும் தள்ளுபடி

1 mins read
8af816f3-6b06-4bd4-9c3c-bf5efd8114a4
சிங்டெல். - கோப்புப் படம்: பெரித்தா ஹரியான்

சிங்டெல் குழுமத்தின் ஆஸ்திரேலிய துணை நிறுவனமான சிங்கப்பூர் டெலிகாம் ஆஸ்திரேலியா இன்வெஸ்ட்மெண்ட்ஸ் (STAI), ஆஸ்திரேலிய வரிவிதிப்பு ஆணையருக்கு எதிராகத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

வழக்கு ஒன்றின் தொடர்பில் அந்நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவது இது இரண்டாம் முறை.

2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஆப்டஸ் நிறுவனத்தை வாங்க சிங்டெல்லின் உட்குழுமம் மேற்கொண்ட வெளிநாட்டு நிதியளிப்பின் தொடர்பானது அந்த வழக்கு.

ஆப்டெஸ் நிறுவனத்தை வாங்கிய பின்னர் சிங்டெல் துணை நிறுவனம் (STAI) ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் இணைந்து, பங்குகளையும் கடன் பத்திரங்களையும் வெளியிட்டது.

பின்னர், 2002ஆம் ஆண்டு சிங்டெல் ஆஸ்திரேலியா இன்வெஸ்ட்மெண்ட்ஸ் (SAI) நிறுவனத்தின் ஒரு பிரிவாக துணை நிறுவனம் (STAI) ஆனது. இவ்விரு நிறுவனங்களும் சிங்டெல்லுக்குச் சொந்தமானவை.

ஆப்டெஸ் கொள்முதல் நடைமுறையின்போது முன்வைக்கப்பட்ட கடன் ஒப்பந்தம் தொடர்பாக ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம் 2016ஆம் ஆண்டு பிரச்சினை எழுப்பியது. மேலும் அந்த அலுவலகம் வருவாய் கணக்கீட்டைத் திருத்தி முதன்மை வரி, வட்டி மற்றும் அபராதத் தொகையை துணை நிறுவனத்திற்கு (STAI) அனுப்பியது.

அதற்கு துணை நிறுவனம் (STAI) தெரிவித்த ஆட்சேபனையை விரிவிதிப்பு ஆணையர் ஏற்கவில்லை.

அந்த வழக்கு இன்னும் தொடருகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்