அதிநவீன சிகிச்சை முறைகளுக்கு மெடிஷீல்டு லைஃப் காப்புறுதி: நிபுணர்கள் வரவேற்பு

நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் முன்னர் குணப்படுத்த முடியாத நோய்களை எல்லாம் குணப்படுத்த முடியும் என்று உறுதிகூறுகின்றன. இதனால், இந்த சிகிச்சை முறைகளை தேசிய சுகாதார காப்புறுதித் திட்டத்தில் கொண்டுவரப்பட உள்ளதை பல சுகாதார பராமரிப்பு நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.

பெரிய அளவிலான மருத்துவ கட்டணங்களைக் கட்ட வசதியாகவும், புதிய நவீன சிகிச்சை முறைகளுக்கு செலவு செய்யவும் ஏதுவாக அண்மையில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங், மெடிஷீல்டு லைஃப் காப்புறுதி சந்தா அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்காக, ‘மெடிஷீல்டு லைஃப் கவுன்சில்’ என்ற 11 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிபுணர் குழு மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டத்தை மறுஆய்வு செய்து அது தனது பரிந்துரைகளை இவ்வாண்டு பிற்பாதியில் இறுதி செய்யும்.

இதில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள ஓர் அம்சம் என்னவெனில் ‘சிடிஜிடிபிஎஸ்’ எனப்படும் அணு, திசுக்கள், மரபணு சிகிச்சை மருத்துவம் ஆகியவற்றை மெடிஷீல்டு லைஃப் காப்புறுதியின்கீழ் கொண்டுவருவது தொடர்பானது.

இந்த சிகிச்சை முறைகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளபோதிலும் அவற்றில் பெரும்பாலானவை தொடக்க கட்டத்தில் உள்ளன, மிகவும் செலவு மிக்கவை. இவற்றின் ஒரு முறை சிகிச்சைக்கு ஆகும் செலவு பல நூறாயிரம் வெள்ளியிலிருந்து பல மில்லியன் வெள்ளிவரை என்று இருக்கிறது என்று அமைச்சர் ஓங் கூறினார். இந்த சிகிச்சை முறைகளில் மருத்துவ ரீதியில் சாத்தியமானதும் சிக்கனமானதுமான சிகிச்சை முறைகள் காப்புறுதித் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படும் என்று விளக்கினார்.

இந்த ‘சிடிஜிடிபிஎஸ்’ எனப்படும் அணு, திசுக்கள், மரபணு சிகிச்சை மருத்துவம் ஆகியவற்றை காப்புறுதித் திட்டத்தின்கீழ் கொண்டுவருவது பற்றி கட்டாயம் பரிசீலிக்க வேண்டும். ஏனெனில், இதில் சில வாழ்வியல் முறையை மாற்றி அமைக்கக்கூடியவை என்று தேசிய பல்கலைக்கழக சுவா சுவீ ஹாக் மருத்துவக் கல்லூரியின் ‘லீடர்ஷிப் இன்ஸ்டிடியூட் ஆஃப் குளோபல் ஹெல்த் டிரான்ஸ்ஃபார்மேஷன்’ என்ற அமைப்பின் தலைவர் இணைப் பேராசிரியர் ஜெரமி லிம் கருத்துரைத்துள்ளார்.

இதற்கு உதாரணமாக அவர் எஸ்எம்ஏ எனப்படும் சிறார்களுக்கு ஏற்படும் முதுகுத் தண்டு தசை இழப்பு நோய்க்கான ‘ஸொல்கென்ஸ்மா’ என்ற புத்தாக்க மரபணு சிகிச்சை முறை மருந்தைச் சுட்டினார். சிங்கப்பூரில், கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, 50 பேருக்கு இந்த நோய் கண்டிருப்பதாகக் கூறினார்.

இந்தத் தசை இழப்பு நோயுள்ளவர்கள் செயலிழப்பு, சுவாசப் பிரச்சினை போன்றவற்றால் அவதியுறுவர் என்றும் அவர்கள் இரண்டு வயது ஆகும் முன்னரே இறக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு ஒருமுறை சிகிச்சையாக மருந்து கொடுத்தால் அந்த மரபணு குறையை நிவர்த்தி செய்து உயிர்பிழைப்பு விகிதம் அதிகரிக்கப்படுகிறது என்று இணைப் பேராசிரியர் ஜெரமி லிம் கூறுகிறார்.

இந்த ‘ஸொல்கென்ஸ்மா’ என்ற மருந்து ஒருகாலத்தில், $3 மில்லியன் என, ஆக அதிக செலவுள்ள மருந்தாக விளங்கியது. சிங்கப்பூரில் கடந்த 2022, 2023ஆம் ஆண்டுகளில் மூன்று சிறார்களுக்கு இந்த நோய் கண்டிருந்த நிலையில் அவர்களின் பெற்றோர் சிகிச்சைக்காக நிதி திரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இது பற்றி மேலும் கூறும் பேராசிரியர் லிம், “இதுபோல் மேலும் பல சிகிச்சை முறைகள் வந்த வண்ணம் உள்ளன. இவற்றை நாம் முனைந்து பரிசீலிக்க வேண்டும். இதற்கான காப்புறுதிச் சந்தா சற்றே உயரக்கூடும். ஆனால், சமுதாயத்தில் தீர்க்கக்கூடிய நோய்களால் பிள்ளைகள் இறப்பதைத் தடுக்கும் வகையில், கூடுதல் சுகாதார பாதுகாப்புக்காக இந்த விலையை நாம் கொடுத்தே ஆக வேண்டும்,” என்கிறார்.

அவருடைய இந்தக் கருத்தை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக சா சுவீ ஹாக் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மற்றோர் இணைப் பேராசிரியரான வீ ஹுவீ லின் என்பவரும் ஆமோதிக்கிறார்.

“சிலர் இதுபோன்ற உயர் செலவின சிகிச்சை முறைகளுக்காக மெடிஷீல்டு லைஃப் காப்புறுதிச் சந்தாவினை உயர்த்துவதா என்று கூறுவர். ஆனால், இதுபோன்ற எதிர்பாராத, பெருமளவிலான செலவினத்தை காப்புறுதி வழியாக எதிர்கொள்வதுதான் சிறந்த முறை.

“பார்க்கப்போனால், காப்புறுதி என்பதே இதுபோன்றவற்றுக்குதான்,” என்று பேராசிரியர் வீ தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!