டோட்டோ முதல் பரிசு $10 மில்லியனாக அதிகரிப்பு

டோட்டோ முதல் பரிசு $10 மில்லியனாக அதிகரிப்பு

1 mins read
4f962e3d-b16b-48ce-b439-111c054b2277
வியாழக்கிழமை மாலை 6 மணிக்குள் குலுக்கல் சீட்டுகளை வாங்க வேண்டும். - படம்: சாவ் பாவ்

வரும் வியாழக்கிழமை (மார்ச் 14) நடைபெறவிருக்கும் டோட்டோ குலுக்கலுக்கான முதல் பரிசுத்தொகை $10 மில்லியனாக அதிகரித்துள்ளது.

கடந்த இரு குலுக்கலிலும் முதல் பரிசை எவரும் வெல்லாததே இதற்குக் காரணம்.

வியாழக்கிழமை மாலை 6 மணிக்குள் குலுக்கல் சீட்டுகளை வாங்க வேண்டும். அன்றைய தினம் இரவு 9.30 மணிக்கு குலுக்கல் நடைபெறும்.

கடந்த திங்கட்கிழமை (மார்ச் 11) நடந்த குலுக்கலில் எவரும் முதல் பரிசை வெல்லவில்லை. அன்றைய தினம் நடைபெற்ற குலுக்கலுக்கான ‘ஜாக்பாட்’ பரிசுத்தொகை $6.2 மில்லியனாக இருந்தது.

வியாழக்கிழமை நடைபெறும் குலுக்கலிலும் முதல் பரிசை எவரும் வெல்லாவிட்டால், மார்ச் 18ஆம் தேதி நடைபெறும் குலுக்கல் ‘காஸ்கேட் டிரா’வாக இருக்கும்.

அந்தக் குலுக்கலில் முதல் பரிசு வெற்றியாளர் எவரும் இல்லையென்றால், ‘ஜாக்பாட்’ பரிசு குரூப் 2 வெற்றியாளர்களிடம் சமமாகப் பகிரப்படும்.

குறிப்புச் சொற்கள்