நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி அதன் வங்கிக் கணக்கில் வெளிநாட்டிலிருந்து மோசடியின் மூலம் வந்த அமெரிக்க டாலர் 1.5 மில்லியன் (S$2 மில்லியன்) அளவிலான பணத்தை தமது வங்கிக் கணக்கில் போட அனுமதி தந்தார் 18 வயது இளையர் ஒருவர்.
அவருக்கு புதன்கிழமை (மார்ச் 13) அன்று $50,000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
அந்த இளையர் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கான வங்கிக் கணக்கையும் திறந்தார். அந்த வங்கிக் கணக்கில் பின்னர் வெளிநாட்டில் மோசடி மூலம் கிடைத்த அமெரிக்க டாலர் 1.5 மில்லியன் (S$2 மில்லியன்) அளவிலான பணம் அதில் வரவு வைக்கப்பட்டது.
டீன்ஸ் வாட்சஸ் என்ற அந்த நிறுவனத்தின் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மூலம் பணம் பெற்றதற்காக $50,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த நிறுவனத்தின் ஒரே இயக்குநர் சிங்கப்பூரரான அலி குத்துப்புதீன் என்ற இளையர். அவருக்கு தற்பொழுது வயது 20. மோசடி மூலம் பணம் பெற்றபோது அவர் அந்த நிறுவனத்தின் ஒரே இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் மீது வீடு புகுந்து குற்றம் புரிந்தது உட்பட சட்டவிரோத கணினி பயன்பாடு சட்டத்தின்கீழும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
காவல்துறைக்கு அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, அலி சிங்கப்பூர் பாய்ஸ் ஹோம் என்ற சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்தபோது அவருக்கும் ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டதாகக் கூறினார். அந்த நபர் அலியை கைக்கடிகாரக் கடை ஒன்றை ஏற்படுத்துமாறும் அதன் மூலம் அலி $20,000லிருந்து $30,000வரை லாபம் ஈட்டலாம் என்றும் உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து அலி, அந்த நபர், ‘கிப்சன்’ என்று மட்டுமே அறியப்படும் மற்றொருவர் ஆகிய இருவரின் உதவியுடன் டீன்ஸ் வாட்சஸ் என்ற அந்த நிறுவனத்தை தொடங்கியதாக அரசு தரப்பு வழக்கறிஞர் டுங் ஷு பின் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன் பின் அலி அந்த இருவரிடமும் தனது சிங்பாஸ், கணினிக்குள் செல்லும் தமது பெயர் மறைச்சொல் விவரங்களுடன் தமது அடையாள அட்டை நகலையும் வழங்கினார் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதன்பின்னர், அந்த இருவரும் அலி தந்த விவரங்களை வைத்து வங்கிக் கணக்குகளை திறந்ததாக அறியப்படுகிறது.
டீன்ஸ் வாட்சஸ் நிறுவனத்தின் இயக்குநர் என்ற முறையில் அலி தமது நிறுவனத்தின் விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டிய கடமை இருப்பதாக தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், அலி அவ்வாறு செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

