பாரதிதாசனாரின் பாடல்கள் சிலவற்றிற்கு, முனைவர் க. சிவராஜ் அவர்கள் இசை அமைக்க, அப்பாடல்களை கலாமஞ்சரி நிறுவனர் செளந்தரநாயகி வயிரவன் அவர்கள் பாடி, அது ஒரு ஒளிவட்டாக விரைவில் வெளியீடு காண இருக்கிறது. அதனையொட்டி, பாரதிதாசனாரைப் பற்றிய பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி ஆகியவை இடம்பெற இருக்கின்றன.
கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு ‘பாரதிதாசனின் தமிழிசைப் பணி’. இது, சிறுவர் (7 -12 வயது, 300 சொற்கள்), நடுவயதினர் (13 - 16 வயது, 350 சொற்கள்), பெரியவர்கள் (17 - 21 வயது, 400 சொற்கள்), மற்றவர்கள் (22 வயதும் அதற்கு மேற்பட்டோரும், 400 சொற்கள்) என நான்கு பிரிவுகளில் நடத்தப்படும்.
பேச்சுப் போட்டி ‘பாரதிதாசனும் தமிழும்’ என்ற தலைப்பில் நடைபெறும். பாட்டுப் போட்டியில் பாரதிதாசன் இயற்றிய பாடல்களைப் பாடலாம்.
போட்டியில் ஒருவர் பங்கு பெற $10 பதிவுக் கட்டணம் செலுத்தவேண்டும். பதிவுக் கட்டணமும் ஒளிவட்டு விற்பனைமூலம் திரட்டப்படும் தொகையும் சிண்டா அமைப்பிற்கு வழங்கப்பட உள்ளது. மேல்விவரங்களுக்கு: செளந்தரநாயகி வயிரவன் - 96510427.