இவ்வார இறுதியில் மார்ச் 16,17ஆம் தேதிகளில் மூன்று வெவ்வேறு காரணங்களுக்காக 18 பேருந்து சேவைகள் பாதிக்கப்படவிருக்கின்றன.
கார்கள் அற்ற ஞாயிற்றுக்கிழமைக்காக சாலைகள் மூடப்படுவது முதல் காரணமாகும். இதனால் 10, 57, 100, 130, 131, 133, 186, 195, 196, 400, 961, 961M, 970 ஆகியவற்றின் பேருந்துகள் குடிமை வட்டாரம், மத்திய வர்த்தக வட்டாரத்தின் சில பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்துமிடங்களில் நிற்காது. இது, மார்ச் 16ஆம் தேதி முதல் மார்ச் 17 இரவு11.59 மணி வரை அமலில் இருக்கும்.
மார்ச் 16ல் பேருந்து 52, 105 ஆகிய பேருந்து சேவைகள், ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரல் ரோட்டின் ஒரு பகுதி மூடப்படுவதால் பாதிக்கப்படும். வரப்போகும் புதிய ஜூரோங் ரிஜன் எம்ஆர்டி நிலையக் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படுவதே இதற்கு காரணம்.
அதிகாலை 12.30 மணியிலிருந்து அதே நாள் பேருந்து சேவைகள் முடியும் வரை இந்தப் பேருந்துகள் ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரல் ரோடு புளோக் 207 பேருந்து நிறுத்துமிடத்தில் நிற்காது.
‘மெடாஸ்பிரிண்ட் தொடர் டுவாத்லான் 2024’ போட்டிகளுக்காக சாலைகள் மூடப்படுவதால் 10, 14, 16, 70M மற்றும் 196 பேருந்து சேவைகள், தேசிய அரங்கம், நிக்கோல் ஹைவே நிலையம் ஆகிய இடங்களில் உள்ள பேருந்து நிறுத்துமிடங்களைத் தவிர்க்கும்.
இந்தப் பேருந்து இடையூறுகள் மார்ச் 17ஆம் தேதி பேருந்து சேவை தொடங்குவதிலிருந்து அதே நாள் காலை 9.30 மணி வரை நீடிக்கும்.

