$506,000க்கு மேல் லஞ்சம்பெற்றவருக்கு 64 வாரச் சிறை

$506,000க்கு மேல் லஞ்சம்பெற்றவருக்கு 64 வாரச் சிறை

1 mins read
5c5f0593-77f9-4900-8da5-087352f82e53
நால்வரிடம் முஹமட் ஃபவுஸி லஞ்சம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. - கோப்புப் படம்

சில்லறை நிர்வாக நிறுவனத்தில் சேமிப்புக் கிடங்கு (ஸ்டோர்) திட்ட நிர்வாகியாகப் பணியாற்றிய முஹமட் ஃபவுஸி அப்துல் ரஹிமானுக்கு $506,000க்கு மேல் லஞ்சம் பெற்றதால் மார்ச் 14ஆம் தேதி 64 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

திரு முஹமட் ஃபவுஸி, பான் பசிபிக் இண்டர்நேஷனல் ஹோல்டிங்சின் பான் பசிபிக் ரிடேல் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது குற்றச்செயல் புரிந்தார்.

நால்வரிடம் இருந்து அவர் லஞ்சம் பெற்றுக் கொண்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

திரு முஹமட் ஃபவுஸி தன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டார்.

நால்வருக்குச் சாதமாக நடந்து கொள்வதற்காக அவர் லஞ்சம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு 476,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்தத் தொகையை அவரால் செலுத்த முடியவில்லை என்றால் மேலும் பத்து மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்