வாழ்நாள் காப்புறுதி: புதிய வழிகாட்டி நடைமுறை

காப்புறுதித் திட்ட நிறுவனங்கள் வாழ்நாள் காப்புறுதி வழங்கும் முன் என்னென்ன அம்சங்களை கருத்தில் கொள்வர், எந்த அளவுக்கு சந்தாக் கட்டணம் இருக்க வேண்டும், அதிக சந்தாத் தொகை விதிப்பது அல்லது குறைந்த சந்தைத் தொகையை நிர்ணயிப்பது.

இவற்றுடன், எது எதற்கு காப்புறுதி தர முடியாது என்று கூறுவது, அல்லது காப்புறுதித் திட்டத்தின் வரைமுறைகளை எவ்வாறு தீர்மானிப்பது போன்ற கேள்விகளும் எழுகின்றன. மேலும், ஒருவரின் மருத்துவப் பிரச்சினைகளை காப்புறுதி நிறுவனங்கள் எவ்வாறு மதிப்பிடுகின்றன அல்லது காப்புறுதித் திட்டத்தின்கீழ் ஒருவர் தனது கோரிக்கைகளில் வெற்றி பெற முடியுமா போன்ற அம்சங்களும் எழும் வாய்ப்பு உள்ளது.

இதுபோன்ற வாடிக்கையாளர்களின் பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதத்திலும் காப்புறுதித் திட்டங்களில் மருத்துவப் பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்பது குறித்தும் புதிய வழிகாட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

வாழ்நாள் காப்புறுதி சங்க மதிய உணவுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (மார்ச் 15) அன்று நடைபெற்றது. அதில் இந்தப் புதிய வழிகாட்டி அறிமுகப்படுத்தப்பட்டு அந்த வழிகாட்டியை ‘லைஃப் இன்ஷியூரன்ஸ் அசோசியேஷன்’ வலைத்தளத்தில் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்த வழிகாட்டியில் காப்புறுதித் திட்ட பொறுப்பேற்பு நடைமுறையை விளக்கிக் கூறும் வண்ணம் ஆஸ்துமா, ரத்த அழுத்தம், உயர் கொழுப்புச் சத்து, நீரிழிவு, கற்றல் குறைபாடு, புற்றுநோய் போன்ற நோய்கள் இருக்குமானால் காப்புறுதி வழங்கும் பொறுப்பேற்பு நடைமுறை எவ்வாறு இருக்கும் என்பதை வழிகாட்டி நடைமுறை 10 உண்மைச் சம்பவங்களின் துணையுடன் விவரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓர் உண்மைச் சம்பவத்தில் 37 வயது நபர் ஒருவர் உளவியல் நிபுணரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருடைய ‘போடி மாஸ் இன்டெக்ஸ்’ எனப்படும் உடல் எடை அழுத்தக் குறியீடு 23 என்றும் அவர் புகை பிடிக்காதவர் என்றும் விவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அத்துடன், அவர் ஓராண்டாக எந்தவித மருந்தும் எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், இந்தத் தகவல்கள் மட்டும் போதாது என்று தெரிவிக்கப்படுகிறது.

அந்த நபர் தாம் சிகிச்சைக்காக செல்லும் மருத்துவரிடம் இருந்து மருத்துவ அறிக்கை ஒன்று பெற வேண்டும். அதில் அவர் மேலும் மருத்துவ ஆலோசனைக்காக மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டியிருக்கும் என்று கூறப்படலாம். ஆனால், அதில் அவருக்கு ஓராண்டாக எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இதுவே காப்புறுதி நிறுவனங்களுக்கு தேவை.

அந்த நபருக்கு மீண்டும் அந்த நோய் ஏற்படும் வாய்ப்பு இருந்தால், அவருடைய மருத்துவமனை உள்நோயாளி சிகிச்சைக்கு காப்புறுதி நிறுவனம் பொறுப்பேற்காது. அத்துடன், அந்த நபருக்கு ‘டோட்டல் அண்ட் பெர்மனண்ட் டிஸெபிலிட்டி கவர்’ என்ற முழுமையான, நிரந்தர செயல்திறன் குறைபாட்டு காப்புறுதி உயரிய சந்தா கட்டண அடிப்படையில் வழங்கப்படலாம்.

இந்த நபர் தொடர்பான சம்பவத்தில் அவருக்கு இருக்கும் மிதமான மனக்கவலை நோய் கடுமையான நோயாக மாறும் வாய்ப்பு குறைவு என்பதால் அவருக்கு சலுகை அளவிலான நிபந்தனைகளுடன் கூடிய காப்புறுதித் திட்டம் வழங்கப்படலாம் என்று அந்த வழிகாட்டியில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!