‘சிங்கப்பூரின் உள்ளூர் மொழி ‘சிங்கப்போரி’: டிக்டாக் சுற்றுப்பயணி

1 mins read
68b8f280-2867-49ca-a0ae-e069e35c6dd0
சாங்கி விமான நிலையத் தகவல் பலகைகளில், ‘சிங்கப்போரி’ எனும் உள்ளூர் மொழியில் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருப்பதாக தனது டிக்டாக் காணொளியில் ஆர்ச்சி கூறியிருந்தார். - படங்கள்: டிக்டாக் காணொளியிலிருந்து எடுக்கப்பட்டவை

சாங்கி விமான நிலையத்தில் ஆறு மணி நேரமாகத் தனது அடுத்த விமானப் பயணத்திற்காகக் காத்திருக்க வேண்டிய சூழலில், வெளிநாட்டவர் ஒருவர் சிங்கப்பூரின் தகவல் பலகைகளில் பயன்படுத்தப்படும் மொழி ‘சிங்கப்போரி’ என்று கூறும் டிக்டாக் காணொளி தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இவ்வாறு கூறிய டிக்டாக் பயனர், ஆர்ச்சி என்ற பெயரில் அறியப்படுகிறார். விமான நிலையத்தின் வசதிகளைப் பற்றிய தனது அனுபவத்தை அவர் மார்ச் 14ஆம் தேதியன்று பதிவிட்டிருந்தார்.

சாங்கி விமான நிலையத்தில் அமைந்துள்ள கள்ளிச்செடித் தோட்டம், வழக்கத்திற்கு மாறாக அவருக்குத் தோன்றியது. இருப்பினும், விமானப் பயணத்திற்காகக் காத்திருப்போர் காற்று வாங்குவதற்கு அது நல்லதோர் இடம் என்று அவர் பாராட்டி இருந்தார்.

ஆனால், செடிகளுக்கு அருகே இருந்த தகவல் பலகைகளில் ‘சிங்கப்போரி’ மொழியில் விவரங்கள் இருப்பதாக அவர் அதே பதிவில் கூறியது இணையவாசிகளுக்கு வேடிக்கையாக அமைந்துவிட்டது.

View post on TikTok

காணொளியின் கீழ் கருத்துகள் பதிவிட்ட ஒருவர், ‘சிங்கப்போரி எனக்குப் பிடித்த மொழி’ என்று விளையாட்டாகக் குறிப்பிட்டிருந்தார். மற்றொருவர், ‘மொழியியல் துறை பயிலும் எனக்கு சிங்கப்போரி மொழியைப் படிக்க ஆசையாக உள்ளது,” என்றார்.

இந்நிலையில், ஆர்ச்சியின் காணொளி பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்