பற்றுச்சீட்டுகளைப் பெற முதியோருக்கு உதவும் தனியார் கடைகள்

மின்சாரத்தையும் தண்ணீரையும் சேமிக்கும் சாதனங்களை வாங்குவோருக்கான பருவநிலை பற்றுச்சீட்டுகளைப் பெற முதியோருக்கு தனியார் கடைகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

அந்தக் கடைகளில் ‘உட்லண்ட்ஸ் டொமெஸ்டிக் எலெக்ட்ரிகல்’ கிளமெண்டி வெஸ்ட் வீடமைப்புப் புளோக்குகளின் மத்தியில் அமைந்து உள்ளது. 1973ஆம் ஆண்டு உட்லண்ட்ஸில் தொடங்கப்பட்ட இந்தக் கடை 1979ஆம் ஆண்டு கிளமெண்டிக்கு இடமாறியது.

பருவச்சூழலுக்கு ஏற்ற குடும்பத் திட்ட விரிவாக்கத்தில் இதுபோன்ற 14 தனியார் கடைகள் இடம்பெற்று உள்ளன.

கடந்த 2020 நவம்பரில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் வீவக வீட்டில் வசிக்கும் குடும்பங்கள் மின்சாரத்தையும் தண்ணீரையும் சேமிக்கும் சாதனங்களை வாங்கும்போது அதற்கு ஆகும் செலவில் பற்றுச்சீட்டு மூலம் உதவுகிறது.

அரசாங்கம் இம்மாதம் 4ஆம் தேதி இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தியது. வீவக வீட்டில் வசிக்கும் எல்லாக் குடும்பங்களுக்கும் $300 பற்றுச்சீட்டு வழங்கப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு அறிவித்தது. மின்சாரத்தையும் தண்ணீரையும் சேமிக்கக்கூடிய பத்து விதமான சாதனங்களை வாங்க அந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம்.

இந்தப் புதிய பற்றுச்சீட்டுகளை ஏப்ரல் 15ஆம் தேதி முதல் கைப்பேசிகளில் பெறலாம். அவ்வாறு கைப்பேசியில் பற்றுச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யும்போது சிரமங்களை எதிர்நோக்கும் முதியோருக்கு உதவி வழங்கத் தயாராக இருப்பதாக கடைகளை நடத்தும் தனிப்பட்ட முதலாளிகள் சண்டே டைம்ஸிடம் கூறினர்.

14 சில்லறைக் கடைகளில் பெஸ்ட் டெங்கி, கெய்ன் சிட்டி, கோல்டு ஸ்டோரேஜ் போன்ற பெரிய கடைகள் தவிர்த்து தனியார் நடத்தும் கடைகளில் உட்லண்ட்ஸ் டொமெஸ்டிக் எலெக்ட்ரிகல், டி.எஸ். யோங் டிரேடிங், சுவான் ஹெங் ஹார்ட்வேர் டிரேடிங் ஆகியன அடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!