பென்கூலன் பள்ளிவாசலில் மாணவர்களுக்கு எழுதுபொருள்கள் நன்கொடை

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யும் பென்கூலன் பள்ளிவாசலும் இணைந்து, சனிக்கிழமை மார்ச் 16ஆம் தேதி அன்று, நோன்பு துறப்பு மற்றும் இன நல்லிணக்க நிகழ்ச்சியை பென்கூலன் பள்ளிவாசலில் நடத்தியது.

தொடர்பு தகவல், மற்றும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவரது சிறப்புரையில், “சிங்கப்பூரில் சமய இன நல்லிணக்கம் தொடர்ந்து மேம்படுவதும், நாம் ஒன்றுபட்ட சமூகமாக திகழ்வதும் மிகவும் அவசியம்,” என்று குறிப்பிட்டதோடு, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) கடந்த 14 ஆண்டுகளில் 134 நிகழ்ச்சிகளை செய்து முடித்திருப்பதைப் பாராட்டினார்.

கல்வி சார்ந்த சமூக நலப் பணிகளை சிங்கப்பூரில் ஆற்றி வரும் இச்சங்கம், நாம் புரிந்துணர்வோடு ஒன்றுபட்ட சமூகமாக தொடர்ந்து திகழவேண்டும் என்ற உயரிய நோக்கில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக சங்கத்தின் தலைவர், முனைவர் மு. அ. காதர் அவரது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

பென்கூலன் பள்ளிவாசல் பரிந்துரை செய்த 10 மாணவர்களுக்கு, எழுது பொருள்களை நன்கொடையாக இச்சங்கம் வழங்கியது.

பென்கூலன் பள்ளிவாசலின் உஸ்தாத் மௌலவி கலீல் அஹமது ஹசனி, நோன்பின் மாண்புகளைப் பற்றி தனது உரையில் எடுத்துரைத்தார்.

சிங்கப்பூரின் பல்வேறு அமைப்புகளின் சமூகத் தலைவர்கள், பல இன மக்கள், மாணவர்கள், சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட சுமார் 250 பேர் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சங்கத்தின் மதியுரைஞர் ஹாஜி அப்துல் ஜலீல் சிறப்பு விருந்தினருக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க, பென்கூலன் பள்ளி வாசலின் தலைவர் ஹாஜி முஹம்மது ரபீக் நினைவுப் பரிசு வழங்கினார். சங்கத்தின் துணைத் தலைவர் திரு கலந்தர் மொஹிதீன் இந்நிகழ்ச்சியை வழி நடத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!