கீழே விழுந்த ஒளிப்பதிவாளருக்கு உதவிய பிரித்தம் சிங்

கீழே விழுந்த ஒளிப்பதிவாளருக்கு உதவிய பிரித்தம் சிங்

1 mins read
05b36bcc-9d40-472c-83a0-4033954a4edb
தமது சூழ்நிலையையும் பாராமல், கீழே விழுந்த ஒளிப்பதிவாளரைக் கைதூக்கிவிட திரு பிரித்தம் சிங் உதவிக்கரம் நீட்டினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ரயீசா கான் சர்ச்சை விவகாரம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க அரசு நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) காலை வந்த எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கிடமிருந்து கருத்து பெற செய்தியாளர்கள் படையாகத் திரண்டனர்.

பரபரப்பான அந்தச் சூழலில் ஒளிப்பதிவாளர் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

தமது சூழ்நிலையையும் பாராமல், அந்த ஒளிப்பதிவாளரைக் கைதூக்கிவிட திரு சிங் உதவிக்கரம் நீட்டினார்.

அவசரத்தில் வேறெவரும் கீழே விழுந்துவிடாமல் இருக்க, ஊடகத்தினர் தங்களுக்குத் தேவையான புகைப்படங்களை எடுத்துக்கொள்ள திரு சிங் சில வினாடிகள் நின்றார்.

“நீங்கள் புகைப்படங்கள் எடுக்க வேண்டுமா? சரி, நான் நிற்கிறேன். இல்லாவிட்டால், அனைவரும் கீழே விழுந்துவிடுவீர்கள்,” என அவர் சிரித்தவாறு கூறினார்.

ஊடகத்தினர் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு ‘தம்ஸ் அப்’ காட்டிவிட்டு நீதிமன்ற வளாகத்திற்கு திரு சிங் சென்றார்.

குறிப்புச் சொற்கள்