சிஓஇ கட்டணம் பொதுவாக ஏறுமுகம்

சிஓஇ கட்டணம் பொதுவாக ஏறுமுகம்

1 mins read
e8e8d599-3b88-4c32-bddf-059984a0ab62
வர்த்தக வாகனப பிரிவில் மட்டும் சிஓஇ கட்டணம் குறைந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒரு பிரிவைத் தவிர எல்லாப் பிரிவுகளிலும் வாகன உரிமைச் சான்றிதழ்க் (சிஓஇ) கட்டணம் அதிகரித்துள்ளது.

புதன்கிழமை (மார்ச் 20) வெளியிடப்பட்ட ஆகக் கடைசி சிஓஇ ஏலக் குத்தகையில் வர்த்தக வாகனங்களுக்கான பிரிவில் மட்டும் கட்டணம் குறைந்தது. அதோடு, கார்கள், மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றுக்கான சிஓஇ கட்டணம் தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றுக்கான சிஓஇ சந்தா கூடியிருப்பது அதற்குக் காரணம்.

சிறிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் மூன்று விழுக்காடு அதிகரித்து 85,489 வெள்ளியாகப் பதிவானது. பெரிய கார்களுக்கான பிரிவில் கட்டணம் ஒரு வெள்ளி கூடி 96,011 வெள்ளியாகப் பதிவானது.

பொதுப் பிரிவில் சிஓஇ கட்டணம் 0.9 விழுக்காடு கூடி 95,856 வெள்ளியாகப் பதிவானது. மோட்டார்சைக்கிள்களைத் தவிர மற்ற எல்லா வாகனங்களையும் இப்பிரிவில் பதிவுசெய்யலாம். எனினும், பொதுவாக பெரிய கார்கள்தான் இப்பிரிவில் சேர்க்கப்பட்டு வருகின்றன.

வர்த்தக வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் 7.3 விழுக்காடு சரிந்து 70,112 வெள்ளியாகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்