தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செயற்கைக் கோழி இறைச்சியைத்தயாரிக்கும் நிறுவனத்துக்குச் சிக்கல்

1 mins read
ca09b3c7-fb36-4319-b442-80da9d08d69b
கடந்த ஆண்டு ஜனவரியிலிருந்து ‘ஹுபர்ஸ்’ உணவகம் செயற்கைக் கோழி இறைச்சியில் தயாரிக்கப்பட்ட உணவுகளை விற்று வந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் செயற்கை முறையில் கோழி இறைச்சியைத் தயாரிக்கும் ‘ஈட் ஜஸ்ட்’ நிறுவனத்துக்கு அமெரிக்காவில் சட்டச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அந்நிறுவனத்துக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் அதன் தலைமை நிர்வாகியான ஜோஷ் டெட்ரிக், இதனால் சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தின் செயல்பாடுகள் பாதிக்காது என்று கூறியுள்ளார்.

‘ஈட் ஜஸ்ட்’ நிறுவனத்தின் சோதனைச் சாலையில் இறைச்சியைத் தயாரிக்கும் துணை நிறுவனமான ‘குட் மீட்’ 2024ஆம் ஆண்டில் உயிரணுக்களை அடிப்படையாகக் கொண்ட இறைச்சியை குறைந்தது இரண்டு மடங்கு அளவுக்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மார்ச் 7ஆம் தேதி அன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் டெட்ரிக் கூறியிருந்தார்.

இந்நிலையில் செயற்கைக் கோழி இறைச்சி உற்பத்தியைத் தற்காலிகமாக அந்நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.

2021 முதல் 2022 வரை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நிறுவனம், 2,000 பரிமாற்றத்திற்கு மேல் செயற்கைக் கோழி இறைச்சியை விற்றுள்ளதாகத் தெரிவித்தது.

சிங்கப்பூரில் ‘ஹுபெர்ஸ் பிஸ்ட்ரோ’ எனும் உணவகம் 2023 ஜனவரியிலிருந்து செயற்கைக் கோழி இறைச்சியில் தயாரிக்கப்பட்ட உணவுகளை விற்று வருகிறது. ஆனால், அதே ஆண்டு டிசம்பரில் அத்தகைய உணவுகளை விநியோகிப்பதை அது நிறுத்திவிட்டது.

குறிப்புச் சொற்கள்