சட்டவிரோத காற்பந்து விளையாட்டு ஒளிபரப்பு: நீதிமன்றம் தடை

சட்டவிரோத காற்பந்து விளையாட்டு ஒளிபரப்பு: நீதிமன்றம் தடை

1 mins read
ab8dbb43-3a4f-473c-b633-6ad0dd3358d3
இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் பிரபல காற்பந்து போட்டிகளின் சட்டவிரோத ஒளிபரப்பைத் தடுப்பதில் உலகளவில் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஒரு பகுதி இது. - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக இங்கிலாந்து காற்பந்து விளையாட்டுகள் ஒளிபரப்பப்படுவதை தடுத்து நிறுத்தும் நோக்கில் அதற்கெதிராக தடை பெறப்பட்டுள்ளது.

இங்கிலிஷ் பிரிமியர் லீக் அதன் காற்பந்து விளையாட்டுகளை இங்கு சட்டவிரோதமாக ஒளிபரப்பும் 25 பிரபல வலைத்தளங்களுக்கு சேவை வழங்குவதை இணைய சேவையாளர்கள் தடுத்து நிறுத்தும் விதமாக அவற்றுக்கு எதிராக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளது.

இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் பிரபலமான காற்பந்து போட்டிகளின் சட்டவிரோத ஒளிபரப்பை தடுப்பதில் உலக அளவில் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஒரு பகுதி இது என்று கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிகள் ஒளிபரப்பப்படுவதற்கு எதிராக இதுவரை 460க்கும் மேற்பட்ட வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வலைத்தளங்களுக்கு எதிரான தடை செய்யும் நடைமுறை செம்மையாக்கப்பட்டு உள்ளதாக இங்கிலிஷ் பிரிமியர் லீக் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அது குறித்த விவரங்களை அது வெளியிடவில்லை.

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பப் பயன்படுத்தப்படும் கருவிகளை தடை செய்ய தான் தாய்லாந்து, இந்தோனீசியா, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் கடந்த காலங்களில் அணுக்கமாக ஒத்துழைத்து வந்துள்ளதாக கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்