ஹைடிலாவ் உணவகத்தில் சாப்பிட்ட குடும்பம் மருத்துவமனையில் அனுமதி

ஹைடிலாவ் உணவகத்தில் சாப்பிட்ட குடும்பம் மருத்துவமனையில் அனுமதி

1 mins read
4c920605-f699-41c8-bc21-c76eaded3c13
பொங்கோல் நார்த்ஷோர் பிளாசாவில் உள்ள ஹைடிலாவ் உணவகத்தில் சாப்பிட்ட குடும்பத்தினர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. - படம்: ஃபேஸ்புக்

பொங்கோலின் நார்த்ஷோர் பிளாசாவில் உள்ள ஹைடிலாவ் உணவகத்தில் சாப்பிட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது பற்றி புதன்கிழமை (மார்ச் 20) அன்று செய்தியாளர் கேள்விகளுக்கு பதிலளித்த சிங்கப்பூர் உணவு முகவை, சுகாதார அமைச்சு, தேசிய சுற்றுப்புற வாரியம் ஆகியவை இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தன.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மார்ச் 10ஆம் தேதி ஹைடிலாவ் உணவகத்தில் உணவருந்தியபின் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர் சிறுவர்கள் என்று கூறப்படுகிறது.

இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஹைடிலாவ் உணவகத்தை தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நார்த்ஷோர் பிளாசாவில் உள்ள அந்த உணவகம் இன்னும் செயல்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்