நகர மன்ற கட்டணங்களை செலுத்த மறுத்த மாதின் மேல்முறையீடு நிராகரிப்பு

நகர மன்ற கட்டணங்களை செலுத்த மறுத்த மாதின் மேல்முறையீடு நிராகரிப்பு

1 mins read
6041a1c6-6bb4-4b33-8ff8-c1a30fcbcb4d
படம். - தமிழ் முரசு

மாது ஒருவர் நகர மன்ற சேவைக் கட்டணங்களை செலுத்த மறுத்தார். அதற்கு அவர் கூறிய காரணங்கள் அவரைச் சுற்றி மின்சாரக் காற்று, சூழ்ச்சித் திறன் பயன்பாடு, மந்திர சக்தி ஆகியவற்றை ஜூரோங் நகர மன்றம் பயன்படுத்தியதாகக் கூறினார்.

அவர் தனக்கு எதிரான தீர்ப்பு, தண்டனை ரத்து செய்யக் கோரிய மேல்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சில்வியா சியாவ் சுவீ கெக் என்ற மாதுக்கு அபராதமாக S$ 700 விதிக்கப்பட்டது. அவர் ஜூரோங் நகர மன்றத்துக்கு சேவை, பராமரிப்பு கட்டணமாக கட்ட வேண்டிய S$ 751.75ஐ கட்டத் தவறினார்.

அது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கும் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கும் ஆன, வட்டியுடன் கூடிய, சேவை, பராமரிப்பு கட்டணம்.

அந்த 57 வயது மாது ஜூரோங் நகர மன்ற பணியாளர்கள் குற்றக் கும்பல்களுடன் சேர்ந்து தம்மைச் சுற்றி மின்சாரக் காற்று பரவக் காரணமாக இருந்ததாக முறையிட்டார். அத்துடன், ஐந்து ஆண்டுகளாக தமது புகர்களை நகர மன்றம் கண்டு கொள்ளவில்லை என்றும் அவர் மேல்முறையீட்டில் வாதாடினார்.

குறிப்புச் சொற்கள்