கைப்பேசி பறித்துச் செல்லப்பட்டதாகப் பொய் கூறிய மாதுக்கு சிறைவாசம்

கைப்பேசி பறித்துச் செல்லப்பட்டதாகப் பொய் கூறிய மாதுக்கு சிறைவாசம்

1 mins read
c09e3b04-14de-4d29-af5a-309f643a0c49
திருவாட்டி லீ யி சிங் கூறிய பொய் காரணமாக காவல் துறையினர் 15 அவசர வாகனங்களைக் கொண்டு தேடுதல் வேட்டை நடத்த வேண்டி வந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

திரு லீ யி சிங் என்ற மாது அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் தமது கைப்பேசியை பறித்துச் சென்றுவிட்டதாக காவல்துறையிடம் பொய்யுரைத்தார்.

உண்மையில், அந்தக் கைப்பேசி அந்த வேளையில் அவருடைய காதலரிடம் இருந்துள்ளது.

இது குறித்து விவரித்த அரசுத் தரப்பு அந்த மாது அவருடைய காதலருடன் ஏற்பட்ட தகராற்றில் தனது கைப்பேசியைத் தவறவிட்டார் என்பதும் அதை அவரது காதலர் எடுத்து வைத்துள்ளார் என்பதும் அந்த மாதுக்குத் தெரியும் என்று கூறியது.

அந்த மாதுக்கு வயது 36. அவரின் இந்தப் பொய்யுரையால் காவல்துறையினர் 15 அவசர வாகனங்களை தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தினர். அந்தத் தேடுதல் வேட்டை 2 மணிநேரம் நீடித்தது.

அத்துடன், கேலாங் லோரோங் 32ல் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராயும்படியும் காவல்துறையினர் பணிக்கப்பட்டனர்.

அந்த தைவானிய மாதின் காதலரிடம் பேசியபோது அந்தக் காதலர் மாதின் கைப்பேசியை வைத்திருந்ததும் அதைத் தன் காதலியிடம் திருப்பித் தர எண்ணியிருந்தார் என்ற உண்மையும் காவல்துறையினருக்குப் புலப்பட்டது.

இறுதியில் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி திருவாட்டி லீ தான் கூறிய பொய்களை ஒப்புக்கொண்டார்.

வியாழக்கிழமை (மார்ச் 21) அன்று திருவாட்டி லீக்கு ஐந்து நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்