இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மார்ச் 23ஆம் தேதி சிங்கப்பூர் வருகிறார். அவர் மார்ச் 25ஆம் தேதி வரை இங்கிருப்பார்.
சிங்கப்பூருக்கு டாக்டர் ஜெய்சங்கர் மேற்கொள்ளும் பயணம், சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே பல்லாண்டு காலமாக நிலவும் அணுக்கமான நட்புணர்வைப் பிரதிபலிக்கிறது. அவரது வருகையின்போது, இரு தரப்புகளும் வட்டார மற்றும் உலகளாவிய மேம்பாடுகள் பற்றிய கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும். மேலும் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள இருதரப்பு ஒத்துழைப்பு பற்றியும் இரு நாட்டு அதிகாரிகள் கலந்துரையாடுவார்கள் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் லீ சியன் லூங், துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங், உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் ஆகியோரைச் சந்தித்துப் பேசுவார்.