தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இவ்வாண்டு வெப்பமானதாக இருக்கலாம்: வானிலை மையம் முன்னுரைப்பு

1 mins read
debc4262-af6c-4995-82cb-e684e0d55a46
‘எல் நினோ’ காரணமாக வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு வெப்பநிலை அதிகமாக பதிவாகக்கூடும் என்று சிங்கப்பூர் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் அதிக வெப்பமுள்ள ஆண்டுகள் பட்டியலில் கடந்த ஆண்டு நான்காவது இடத்தைப் பிடித்தது.

1997, 2015ஆம் ஆண்டுகளைப் போலவே கடந்த ஆண்டின் வருடாந்திர சராசரி வெப்பநிலை 28.2 டிகிரி செல்சியஸ்.

பட்டியலின் முதல் இடத்தில் 2016, 2019ஆம் ஆண்டுகள் உள்ளன.

அவற்றின் வருடாந்திர சராசரி வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியஸ்.

பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள 1998ஆம் ஆண்டில் வருடாந்திர சராசரி வெப்பநிலை 28.3 டிகிரி செல்சியசாகப் பதிவானது.

அதைக் காட்டிலும் இவ்வாண்டு வெப்பமாக இருக்கக்கூடும் என்று முன்னுரைக்கப்படுகிறது.

‘எல் நினோ’ வானிலை மாற்றத்தால் இந்நிலை ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

‘எல் நினோ’ கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் ஆகப் பெரிய அளவில் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது.

குறிப்புச் சொற்கள்