மலேசியாவுக்கு செல்லும் மெக்லேரன் கார்களுக்கு காப்புறுதியை நிறுத்திய ‘ஏஐஜி’

மலேசியாவுக்கு செல்லும் மெக்லேரன் கார்களுக்கு காப்புறுதியை நிறுத்திய ‘ஏஐஜி’

1 mins read
663a28b8-e51c-4440-b92b-3b6e454e5993
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி ஜோகூரில் சிங்கப்பூரைச் சேர்ந்த மூன்று மெக்லேரன்  கார்கள் விபத்தில் சிக்கின. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்லும் மெக்லேரன் கார்களுக்கு காப்புறுதியை நிறுத்தியுள்ளது ‘ஏஐஜி’ காப்புறுதி நிறுவனம்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி ஜோகூரில் சிங்கப்பூரைச் சேர்ந்த மூன்று மெக்லேரன் கார்கள் விபத்தில் சிக்கின. அதில் கார்களுக்கு சேதம் ஏற்பட்டது. இருப்பினும் அச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும் மலேசியாவில் மெக்லேரன் கார்கள் அடிக்கடி பெரிய விபத்துகளில் சிக்கி வரும் போக்கு அதிகரித்துள்ளது. அதைத் தொடர்ந்து ‘ஏஐஜி’ நிறுவனம் அதன் காப்புறுதி திட்டங்களில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மலேசியாவில் மெக்லேரன்  கார்களுக்கு ஏற்படும் விபத்துகளுக்கு ‘ஏஐஜி’ காப்புறுதி தராது என்று தெரிவிக்கப்பட்டது.

இது ஒரு அரிய நடவடிக்கை என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

நிலப்போக்குவரத்து ஆணையத்தின் தரவுகளின்படி சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 200 மெக்லேரன்  கார்கள் இருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்