கணினியைப் பயன்படுத்தி பிஎஸ்எல்இ தேர்வுத்தாள்கள் திருத்தம்

2022ஆம் ஆண்டிலிருந்து தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வு (பிஎஸ்எல்இ) தேர்வுத்தாள்களைக் கணினித் திரையில் பார்த்து திருத்தும் அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனால் பிஎஸ்எல்இ தேர்வுத்தாள்களைத் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 14,000லிருந்து 7,000ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் பிஎஸ்எல்இ தேர்வுத்தாள்களைத் திருத்துவதற்கான நாள்கள் நான்கிலிருந்து மூன்றாகக் குறைக்கப்பட்டது என்று சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டுக் கழகம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறியது.

தற்போது பிஎஸ்எல்இ மற்றும் உள்ளூரில் திருத்தப்படும் ஜிசிஇ தேர்வுத்தாள்கள் இணையம் மூலம் திருத்தப்படுகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 450,000 தேர்வுத்தாள்கள் சிங்கப்பூரில் திருத்தப்படுகின்றன.

கணினித் திரையில் தேர்வுத்தாளைப் பார்த்துத் திருத்தும் முறையை சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டுக் கழகம் 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!