மரியாதையில்லாமல் நடந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட உள்ளூர் நடிகர்

மரியாதையில்லாமல் நடந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட உள்ளூர் நடிகர்

1 mins read
40417e7f-e3ef-437b-9682-1f8de0b5f431
காணொளி மூலம் கண்ணீருடன் மன்னிப்பு கேட்டுக்கொண்ட சுஹாய்மி யுசோஃப் - படம்: சுஹாய்மி யுசோஃப் ஃபேஸ்புக்

அட்மிரல்ட்டி வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள ரமலான் சந்தையில், கடைக்காரர் ஒருவரிடம் மரியாதையில்லாமல் நடந்துகொண்டதற்காக உள்ளூர் நடிகர் சுஹாய்மி யுசோஃப் கண்ணீருடன் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

தமது செயல் குறித்து வருத்தம் தெரிவித்து, மார்ச் 22ஆம் தேதியன்று ஐந்தரை நிமிடக் காணொளியை ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் பக்கங்களில் அவர் வெளியிட்டார்

சுஹாய்மி தமது தாயாரிடமும் ஊழியர்களிடமும் மரியாதையில்லாமல் பேசியதாக ரமலான் சந்தையில் குளிர்பானங்களை விற்கும் திரு ஷேக் முகம்மது கூறினார்.

இந்நிலையில், திரு ஷேக்கின் தாயாருடைய மனதைப் புண்படுத்தியதற்காக 54 வயது சுஹாய்மி மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

தவறு செய்ததைத் தாம் ஒப்புக்கொள்வதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்