தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லிம் கிம் சான் நினைவு உபகாரச் சம்பளம் - விண்ணப்பிக்க அழைப்பு

1 mins read
ff8752fa-8bc4-47f5-a407-6e5fe3752be0
படம்: - தமிழ் முரசு

இளநிலைப் பட்டதாரிகளுக்கான லிம் கிம் சான் நினைவு உபகாரச் சம்பளத்துக்கு ஆர்வமுள்ளோர், ஏப்ரல் 30ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.

எஸ்பிஎச் அறநிறுவனத்தால் ஆதரிக்கப்பட்ட இந்த விருது, 2006ல் அமைக்கப்பட்டது. 5,000 வெள்ளிக்கும் குறைவான வருமானம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த சிங்கப்பூர் குடிமக்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

நடுத்தரக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த சிங்கப்பூர் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் முழுநேரமாக மொழி, மொழியியல், மனிதவியல் பட்டப்படிப்பைப் பயில, இந்த ஒப்பந்தமற்ற உபகாரச் சம்பளம் கைகொடுக்கிறது.

பட்டப்படிப்புக்கான முழு பாடக் கட்டணத்துடன் ஆண்டுக்கு 2,000 வெள்ளி கைப்பணமும் ஆண்டுக்கு 300 வெள்ளி புத்தகப் பணமும் வழங்கப்படுகின்றன.

இதுவரை 171 மாணவர்கள் இந்த உபகாரச் சம்பளம் மூலம் பயனடைந்துள்ளனர். உபகாரச் சம்பளத்தைப் பெறும் மாணவர்கள் எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தில் வேலை பயிற்சி செய்யும் வாய்ப்பினை பெறுவர்.

குறிப்புச் சொற்கள்