தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈஸ்வரன் விவகாரம்: லம் கொக் செங்கிடம் பலமுறை விசாரணை நடத்தப்பட்டது

1 mins read
bdef107c-7350-41c6-b948-72b43a63dbb7
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தொடர்பான விவகாரத்தில் திரு லம் கொக் செங்கிடம் லஞ்ச, ஊழல் ஒழிப்புப் பிரிவு பலமுறை விசாரணை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது மார்ச் 25ல் மேலும் எட்டுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்ற ஆவணங்களில் 75 வயது சிங்கப்பூரர் திரு லம் கொக் செங்கின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் லம் சாங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். சொத்து நிர்வாகம், உட்புற வடிவமைப்பு, கட்டுமானப் பணிகள் ஆகிய வர்த்தகங்களில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

சிங்கப்பூர் பங்குச் சந்தை எழுப்பிய கேள்விகளுக்கு லம் சாங் நிறுவனம் மார்ச் மாதம் 25ஆம் தேதியன்று பதிலளித்தார்.

திரு லம்மிடம் லஞ்ச, ஊழல் ஒழிப்புப் பிரிவு விசாரணை நடத்தியதா, அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதா அல்லது அவருக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதா என்று லம் சாங் நிறுவனத்திடம் சிங்கப்பூர் பங்குச் சந்தை கேள்விகளை எழுப்பியிருந்தது.

ஈஸ்வரன் விவகாரத்தில் லஞ்ச, ஊழல் ஒழிப்புப் பிரிவு தம்மிடம் பலமுறை விசாரணை நடத்தியதாகத் நிறுவனத்தின் இயக்குநர் சபையிடம் திரு லம் தெரிவித்ததாக லம் சாங் நிறுவனம் கூறியது.

திரு லம் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை என்றும் அவருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஒழிப்புப் பிரிவு கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என்றும் அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்