தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோத ஒளிபரப்புக் கருவிகள் விற்பனை: ஆடவர், இரு நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு

1 mins read
d9860318-2343-4376-8819-ddff504e32d0
டிஸ்னி, நெட்ஃபிளிக்ஸ், இங்கிலிஷ் பிரிமியர் லீக் உட்பட பல அமைப்புகளின் பதிப்புரிமை மீறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: இணையம்

சட்டவிரோத ஒளிபரப்புக் கருவிகளை விற்றதாக இரு நிறுவனங்கள், ஆடவர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

டிஸ்னி, நெட்ஃபிளிக்ஸ், இங்கிலிஷ் பிரிமியர் லீக் உட்பட பல அமைப்புகளின் பதிப்புரிமை மீறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பதிப்புரிமைச் சட்டத்தின்கீழ் சிங்கப்பூரரான 36 வயது கே ஸின் மீது 24 குற்றச்சாட்டுகள் பதிவாகின.

அவர் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகள் எம்டி கேட்ஜட் பிளஸ் நிறுவனத்துடன் தொடர்புடையவை. ஏனைய 12 குற்றச்சாட்டுகள் கிரான்ட்நியூ நிறுவனத்துடன் தொடர்புடையவை.

இக்குற்றங்களைப் புரிந்தபோது இந்த இரு நிறுவனங்களும் ரோச்சோர் கேனல் சாலையில் உள்ள சிம் லிம் ஸ்குவேர் கடைத்தொகுதியிலிருந்து செயல்பட்டன.

இந்த வழக்கில் வழக்கிற்கு முந்தைய கலந்துரையாடல் மே 8ல் நடைபெறும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் பதிப்புரிமைச் சட்டத்தின்கீழ் பதிவாகியுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் கேவுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $100,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

ஒவ்வொரு குற்றச்சாட்டின்கீழ் அந்த இரு நிறுவனங்களுக்கும் தலா $200,000 அபராதம் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்