‘இலக்கியச் சங்கமம் 2024’ நிகழ்ச்சி

1 mins read
cec8dd88-b622-451c-85ba-ec75787e5ca1
‘இலக்கியச் சங்கமம் 2024’ நிகழ்ச்சி ஏழாம் ஆண்டாக நடைபெறவுள்ளது. - படம்: பிக்சாபே

வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் ‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பு ‘இலக்கியச் சங்கமம் 2024’ நிகழ்ச்சியை ஏழாம் ஆண்டாக நடத்தவுள்ளது.

தொடக்கநிலை மாணவர்கள் கொன்றை வேந்தன், திரிகடுகம், இன்னா நாற்பது, சிறுபஞ்சமூலம் போன்ற சங்க கால நூல்களில் இருந்து பாடல் மற்றும் விளக்கம் கூறும் போட்டிகளில் பங்கெடுப்பார்கள்.

உயர்நிலை மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டியும், தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கு சங்க கால காட்சிகளுக்கு உரையாடும் போட்டிகளும் நடக்கவுள்ளன. பெரியவர்களுக்குப் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு இலக்கியப் போட்டிகள் நடத்தப்படும்.

‘நல்லறமும் ஒண்பொருளும்’, ‘நோமென் நெஞ்சே! நோமென் நெஞ்சே! போன்ற தலைப்புகளில் உரைகளும் இடம்பெறும். தொடர்புக்கு: திரு. இரமேஷ்குமார், +65 8571 3448.

குறிப்புச் சொற்கள்