தாயைப் போல் கையெழுத்திட்டு ஆடவர் மோசடி

தாயைப் போல் கையெழுத்திட்டு ஆடவர் மோசடி

1 mins read
c48d631e-cf1b-43b1-b960-00018c0e1893
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கேளிக்கை கூடங்களில் உள்ள பெண்களுக்கு பூங்கொத்து, மாலை உள்ளிட்ட பொருள்களை வாங்கிக்கொடுத்து கடன் பிரச்சினையில் சிக்கிய ஆடவர் தமது தாயைப்போல கையெழுத்திட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

லியூ குய் லியாங் என்னும் ஆடவர் தமது தாயின் இரு கார்களை விற்க கார் விற்பனையாளரை அணுகியுள்ளார். அப்போது விற்பனை ஆவணங்களில் தமது தாயைப் போலவே லியாங் கையெழுத்திட்டுள்ளார்.

இச்சம்பவம் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது.

ஆடவர் ரோல்ஸ் ராய்ஸ் காரை 700,000 வெள்ளி, மினி கூப்பர் காரை 130,000 விற்க ஒப்புதல் அளித்தார். அதற்காக முன்பணமாக 150,000 வெள்ளி லியாங் கார் விற்பனையாளரிடம் இருந்து வாங்கினார்.

தமது கையெழுத்தை மகன் மோசடி செய்ததை அறிந்த லியாங்கின் தாய், காவல்துறையில் புகார் கொடுத்தார். அதன் பின்னர் நடந்த விசாரணையில் ஆடவர் குற்றம் செய்தது நிரூபமானது.

லியாங்கிற்கு 12 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார். தற்போது அவர் பிணையில் உள்ளார்.

குறிப்புச் சொற்கள்
குற்றம்நிதி மோசடி