சிறுநீரகப் பிரச்சினை குறித்த அச்சம்: ‘ரெட் யீஸ்ட் ரைஸ்’ உள்ள இரு ‘சாக்கே’ வகைகள் மீட்பு

சிறுநீரகப் பிரச்சினை குறித்த அச்சம்: ‘ரெட் யீஸ்ட் ரைஸ்’ உள்ள இரு ‘சாக்கே’ வகைகள் மீட்பு

1 mins read
b21145ed-029f-4964-974b-240b3371b23b
மீட்டுக்கொள்ளப்பட்டுள்ள சாக்கே மதுபான வகைகள். - படம்: சிங்கப்பூர் உணவு அமைப்பு

சிறுநீரகப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்படும் ஜப்பானின் இரண்டு ‘சாக்கே’ மதுபான வகைகள் சிங்கப்பூரில் விற்பனையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

750 மில்லி லிட்டர் அளவிலும் 300 மில்லி லிட்டர் அளவிலும் விற்கப்படும் மியோ ஸ்பார்க்கிலிங் சாக்கே பிரிமியம் (ரோஸ்) மதுபானம் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த இரு சாக்கே வகைகளை மீட்டுக்கொள்ளுமாறு சிங்கப்பூர் உணவு அமைப்பு, பான் பசிபிக் ரிட்டெயில் மேனேஜ்மென்ட் நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டது. உணவுத் தயாரிப்பு நிறுவனமான டக்காரா ‌ஷுஸோ நிறுவனம் அவ்வாறு செய்ததையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்