2008க்குப் பிறகு அலுவலக வாடகை புதிய உச்சம்

2008க்குப் பிறகு அலுவலக வாடகை புதிய உச்சம்

1 mins read
cc8ce780-9572-4885-94c1-0d73d111d637
சிங்கப்பூரில் இவ்வாண்டு முதல் காலாண்டில் அலுவலக வாடகை 15 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்தது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் இவ்வாண்டு முதல் காலாண்டில் அலுவலக வாடகை 15 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்தது.

நகரின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் அலுவலக இடத்துக்கான மாதாந்தர வாடகை ஒரு சதுர அடிக்கு 11.42 வெள்ளியாக உயர்ந்ததென புதன்கிழமை (மார்ச் 27) ஜோன்ஸ் லேங் லசால் வெளியிட்ட தரவில் தெரியவந்துள்ளது.

கடந்த 2008 கடைசி காலாண்டிற்குப் பிறகு வாடகை இவ்வளவு அதிகரித்திருப்பது இதுவே முதன்முறை. இவ்வாண்டு முதல் மூன்று மாதங்களுக்கு முந்தைய இரு காலாண்டுகளில் வாடகை 0.5 விழுக்காடு குறைந்திருந்தது.

வணிகச் சொத்துச் சந்தையில் சிங்கப்பூர் இதுவரை பெரிய அளவிலான பாதிப்பைத் தவிர்த்துள்ளது. மேற்கத்திய நகர்களிலும் ஹாங்காங் போன்ற வட்டார நகர்களிலும் சொத்துச் சந்தைக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாண்டு முதல் காலாண்டில் அலுவலக காலியிடங்கள் 5.3 விழுக்காடாகக் குறைந்தது. அதற்கு முந்தைய மூன்று மாதங்களில் அது 5.5 விழுக்காடாக இருந்தது.

நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் கணிப்புகளின்படி, இவ்வாண்டு 3 மில்லியன் சதுர அடிக்கும் மேலான அலுவலக இடம் நிறைவுசெய்யப்படும். கடந்த ஆண்டு நிறைவுசெய்யப்பட்ட அளவை விட இது மூன்று மடங்கிற்கும் அதிகம்.

குறிப்புச் சொற்கள்
அலுவலகம்வாடகை