கடும் வெயில்; சிங்கப்பூரில் புற ஊதா குறியீடு தீவிரமான நிலையை எட்டியது

சிங்கப்பூரில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. புதன்கிழமை (மார்ச் 27) பிற்பகல் நேரத்தில் புறஊதா (யூவி) குறியீடு தீவிர நிலையைத் தொட்டது.

பிற்பகல் 12.15 மணிக்கு யூவி குறியீடு 11ஐ தொட்டது. பின்னர் 1.15 மணிவாக்கில் அது 12ஐ தொட்டது. பின்னர் 2.45 மணிக்கு அது 10ஆகக் குறைந்தது.

யூவி குறியீடு குறைந்தாலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தோல்பூச்சுகளையும் குடைகளையும் பயன்படுத்துமாறு தேசியச் சுற்றுப்புற வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதிக வெப்பம் தோல்களில் காயங்களை உண்டாக்கும் என்பதால் மக்கள் கவனமாக இருக்கும்படியும் அமைப்பு எச்சரித்தது.

யூவி குறியீடு 11க்கு மேல் இருந்தால் அது தீவிரமான நிலை எனப்படும். யூவி குறியீடு 8க்கும் 10க்கும் இடையில் இருந்தால் அது ஆக அதிகம் எனப்படும்.

யூவி குறியீடு ஆக அதிகம், தீவிரமான நிலைகளில் இருந்தால் அவை தோல்களுக்கு பாதிப்புகளை விளைவிக்கும். அதனால் மக்கள் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையைப் பின்பற்ற வேண்டும் என்று அமைப்பு கூறியது.

சிங்கப்பூரில் புதன்கிழமை வெப்பநிலை 31.1 டிகிரி செல்சியசுக்கும் 35.7 டிகிரி செல்சியசுக்கும் இடையில் பதிவானது. அதிகபட்ச வெப்பநிலை பாய லேபாரில் பதிவானது.

பூமி மீது பதிவாகும் புறஊதா கதிர்வீச்சை கணக்கிடும் முறையை யூவி குறியீடு எனப்படும். யூவி குறியீட்டின் ஆக அதிக நிலை 15.

யூவி குறியீடு அதிகரிக்கத் தொடங்கினால் அது தோல், கண்களைப் பாதிக்கும்.

தோல் பூச்சுகளின் எஸ்பிஎஃப் அளவு குறைந்தது 30ஆக இருக்க வேண்டும். அவற்றை இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும்.

பொதுவாக யூவி குறியீடு காலை 11 மணிக்கும் பிற்பகல் 3 மணிக்கும் இடையில் அதிகமாக இருக்கும். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், செப்டம்பர் ஆகிய மாதங்களில் யூவி குறியீடு அதிகமாகப் பதிவாகும் காலம்.

கடந்த ஆண்டைவிட சிங்கப்பூரில் இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று அண்மையில் சிங்கப்பூர் வானிலை நிலையம் அறிவித்திருந்தது.

சிங்கப்பூர் வரலாற்றில் ஆக வெப்பமிக்க ஆண்டுகளில் 2023ஆம் ஆண்டு நான்காவது இடத்தில் உள்ளது.

இதற்கிடையே, கடும் வெப்பகாலத்தைச் சமாளிப்பதற்காக மாணவர்கள் அவர்களின் உடற்பயிற்சிக் கல்விச் சீருடையை அணிந்துகொள்ள சில பள்ளிகள் அறிவுறுத்தியுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!