இரும்புத் தடியை கொண்டுத் தாக்கியதாக சிறுவன் மீது குற்றச்சாட்டு

இரும்புத் தடியை கொண்டுத் தாக்கியதாக சிறுவன் மீது குற்றச்சாட்டு

1 mins read
f6c1b3ba-813e-4f6c-b3ff-593c5bdca4f7
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செங்காக் வட்டாரத்தில் இரும்புத் தடியை கொண்டு தாக்கியதாக 15 வயது சிறுவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ஃபெர்ன்வேல் லேனில் நடந்து சென்றபோது தாக்கப்பட்டதாகவும் அவரை சிறுவன் தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் காவல்துறை செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தப் பெண்ணுக்கு சில காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதல் சம்பவம் குறித்து தங்களுக்கு மார்ச் 22ஆம் தேதி 12 மணிக்கு தகவல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் சிறுவனை கைது செய்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்