கட்டுமான நிறுவனம் மீது இந்திய ஊழியரின் வழக்கைத் தொடர அனுமதி

கட்டுமான நிறுவனம் மீது இந்திய ஊழியரின் வழக்கைத் தொடர அனுமதி

1 mins read
1493922b-5f8c-409d-9521-0fcb49d883a0
தெங்கா நகரத்தில் கட்டுமானப் பணிகள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிநாட்டு ஊழியரான குருசாமி முத்து ராஜா 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லாரியில் பயணம் செய்த போது கடுமையான காயத்திற்கு உள்ளானார். காயத்திற்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவைச் சேர்ந்த 34 வயது குருசாமிக்கு ஏற்பட்ட காயத்தால் அவர் வேலை செய்ய தகுதியில்லாதவர் என்று அவரை நிறுவனம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பணியில் இருந்து நீக்கியது. அதன் பின்னர் அவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், குருசாமி ‘புல் ஹவுஸ் பில்டிங் கன்ஸ்டிரக்சன்’ நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்தார். இருப்பினும் போதிய வழக்கு நடவடிக்கைகளை குருசாமி மேற்கொள்ளாததால் அவரின் வழக்கு 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிலுவையில் இருந்தது.

இதையடுத்து, வழக்கைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று குருசாமியின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்