தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சேமிப்புக் கிடங்கில் உள்ள மின்சிகரெட்டுகளை திருட திட்டமிட்ட மூவர்

1 mins read
0b7c837b-2dff-44da-b6e5-b9a1c8692804
ஆடவர்களிடம் இருந்து திருடப் பயன்படுத்தும் பொருள்களைக் காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

உட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள ஒரு சேமிப்புக் கிடங்கில் கைப்பற்றப்பட்ட மின்சிகரெட்டுகள் மற்றும் அதற்கு தொடர்புடைய பொருள்களை சுகாதார அறிவியல் ஆணையம் வைத்திருந்தது.

அந்த பொருள்களைத் திருட எல்வின் சூர்யகாந்தன் (22), சீ வாய் யுவன் (35), லிம் சீ வை (38) ஆகிய மூவரும் திட்டமிட்டனர்.

மலேசியரான சீ, மார்ச் 23ஆம் தேதி சேமிப்புக் கிடங்கில் ஆள் இல்லா நேரம் பார்த்து நுழைய திட்டம் தீட்டினார். அதனால் சீயும் அவரது கூட்டாளிகளும் இணைந்து சேமிப்புக் கிடங்கை நோட்டமிட்டனர்.

சீ சந்தேகத்திற்குரிய வகையில் நடந்துகொள்வதைக் கண்ட அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் சீ போதைப்பொருள் குற்றங்களுக்காகச் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

இரண்டு நாள்களுக்கு பின்னர் எல்வின், லிம் இருவரும் சந்தேகத்திற்குரிய வகையில் சேமிப்புக் கிடங்கு அருகில் வலம் வந்தனர். அவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து திருடப் பயன்படுத்தும் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

திருடத் திட்டமிட்ட மூவர் மீதும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

குறிப்புச் சொற்கள்