மன்னிப்பு கோரியவர்களுக்கு ஆறுதல் கூறிய சகோதரி

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவுகூரும் புனித வெள்ளி நாளில் சிங்கப்பூர் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் ஒன்றுகூடி தங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்புக் கோருவார்கள்.

சிங்கப்பூரில் ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருவர், தவறு செய்து மன்னிப்புக் கோரும் கைதிகளின் இறுதிப் பயணத்திற்கு தோள் தந்தார். 85 வயதாகும் சகோதரி ஜெரார்ட் பெர்னாண்டஸ் இருளில் இருந்த கைதிகளுக்கு இயேசு கிறிஸ்துவாக தோன்றினார்.

மரண தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு ஆறுதல் கூறிய சகோதரி ஜெரார்ட். படம்: டினேஷ் குமார்

மரண தண்டனைக் கைதிகள் தூக்கிலிடப்படும் இறுதி நாள் வரை ஆறுதல் கூறியவர் சகோதரி, சகோதரி ஜெரார்ட். இதுவரை 18 மரண தண்டனைக் கைதிகளுடன் இவர் பயணம் செய்துள்ளார். 2017ல் இவர் ஓய்வுபெற்றார்.

கைதிகள் தூக்கிலிடப்படுவதற்கு முன்னர் சகோதரி ஜெரார்ட் மண்டியிட்டு பிரார்த்தனைகள் செய்தவர். “தவறு செய்து விட்டார்கள். இனி அவர்கள் நல்ல படியாக இறைவனடி சேர்வதுதானே முறை,” என்று உணர்வு மேலிடச் சொன்னார் சகோதரி ஜெரார்ட்.

மரண தண்டனைக் கைதி தூக்கிலிடப்படும் வரை கைதியுடன் இருந்து அந்த அறைக்கு அவர்களுடன் கூடவே நடந்து சென்றவர் சகோதரி ஜெரார்ட். தவறு செய்தவர்களின் இறுதிப் பயணம் இயேசுவை நோக்கி அமைதியாகச் செல்ல வேண்டும் என்பதற்காக இவர் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை மீண்டும் நம்பிக்கையை நோக்கி வழிநடத்தி, மரண பயத்தைக் குறைக்கும் கடினமான பணியை நிறைவேற்றினார்.

கடந்த 62 ஆண்டுகளாக சகோதரி ஜெரார்ட் ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரியாக இருந்து வருகிறார். சிங்கப்பூரில் பிறந்து, வளர்ந்த இவர் தனது 18வது வயதில் ‘குட் ஷெப்பர்ட் சிஸ்டர்ஸ்’ எனும் மேரிமவுண்டில் இருக்கும் ஒரு கான்வென்டில், ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் சமூகத்தில் சேர்ந்தார்.

சாங்கி சிறைச்சாலையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக மரண தண்டனை கைதிகளுக்குப் பிரார்த்தனைகளைப் போதித்தார். சகோதரி ஜெரார்டுக்கு ஆன்மிகம் ஆறு வயதில் புலப்பட்டது. அவரது தந்தை சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியின் செயலாளராகப் பணிபுரிந்தவர்.

“ஆறு வயதானபோது என் தந்தை ‘சிறைச்சாலை’, ‘பாடல்’, ‘தூக்கிலிடுவது’ ஆகிய வார்த்தைகள் கொண்ட பிரார்த்தனையை மனப்பாடமாக ஒப்பிக்கச் சொல்வார். அப்போது நான் அதிர்ச்சியில் இருந்தேன். அதற்குப் பதிலாக நான் சாதாரண பிரார்த்தனைகளை மனனம் செய்து ஒப்பித்தேன்,” என்று சகோதரி ஜெரார்ட் கூறினார்.

தாய் வயிற்றில் தான் இருந்தபோதே இயேசு தன்னை அழைத்ததாக சகோதரி ஜெரார்ட் நம்புகிறார். இந்த ஆறுதல் பணி மனதை நொறுங்க செய்தாலும், நன்மை தீமையை வென்றது எனும் நீதி வாக்கியத்தை சகோதரி ஜெரார்ட் நம்புகிறார்.

சிங்கப்பூர் போதைப்பொருள் ஒழிப்புச் சங்கத்தின் மறுவாழ்வுப் பிரிவில் தொண்டாற்றிவந்த சகோதரி ஜெரார்ட் தண்டனைக் கைதிகளுக்கு உதவ விரும்பினார். முதல் மரண தண்டனை கைதியுடன் தண்டனை அறைக்குச் சென்றபோது சகோதரி ஜெரார்டுக்கு 36 வயதுதான்.

1980களில் ஆக மோசமான ஏட்ரியன் லிம் கொலைச் சம்பவத்தில் பிடிபட்டவர்களில் ஒருவரான கேத்தரின் டான் முய் சூ, சகோதரி ஜெரார்ட் சந்தித்த முதல் கைதி.

அந்தக் கைதியுடனான அனுபவம் சகோதரி ஜெரார்டை மனதளவில் மிகவும் பாதித்தது. அக்கைதி இவரின் முன்னாள் மாணவி.

ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ள சகோதரி ஜெரார்ட் மூன்றாண்டுகளுக்கு கான்வென்டில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அக்கைதியின் குடும்பமும் சகோதரி ஜெரார்டுக்கு நல்ல பழக்கம்.

இவர் மரண தண்டனைக் கைதிகளுக்கு ஆறுதல் கூறத் தொடங்கியபோது அந்தக் கொலைச் சம்பவம் அனைவரும் பேசும் வகையில் இருந்தது. கேத்தரினைப் பார்க்க விரும்புவதாக சிறைச்சாலை கண்காணிப்பாளரிடம் கூறியபோது கேத்தரின் ஆறு மாதங்கள் கழித்துதான் சந்திப்புக்கு ஒப்புக்கொண்டதாக சகோதரி ஜெரார்ட் சொன்னார்.

“என்னைப் பார்த்ததும் கேத்தரின் தன்னைக் கண்டிக்கும்படி சொன்னார். எப்படியாவது நான் அவரை மாற்ற வேண்டும் என்று கேத்தரின் என்னிடம் மன்றாடினார்,” என்று சகோதரி ஜெரார்ட் சொன்னார்.

அதற்குப் பிறகு கேத்தரினையும் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட இதர இரண்டு பேரையும் சகோதரி ஜெரார்ட் வாரந்தவறாமல் ஏழாண்டுகள் பார்க்கச் சென்றார்.

அவர்கள் மூவரும் 1988ல் தூக்கிலிடப்பட்டனர். “கேத்தரினைப் பார்த்தபோது அவள் நான் முன்பு பார்த்தது போலவே அழகாக இருக்கிறாளே என்றுதான் எனக்கு முதலில் தோன்றியது. அதே கருப்பு கண்கள்,” என்று நினைவுகூர்ந்தார் சகோதரி ஜெரார்ட்.

“கேத்தரினுக்குப் பிடித்த பிரார்த்தனைகளை ஜபம் செய்தேன். அவள் மெதுவாக மாறத் தொடங்கினாள்,” என்று நாத் தழுதழுக்க சொன்னார் சகோதரி ஜெரார்ட்.

தூக்கிலிடப்படுவதற்கு முன் கேத்தரினின் கைகளை இறுகப் பிடித்துகொண்ட பிறகு, படிகள் ஏறியது, நெம்புகோல் இழுக்கப்பட்ட சத்தம் ஆகியவை இன்னும் சகோதரி ஜெரார்டின் மனக்கண் முன் நிற்கின்றன.

“அதன் பிறகு கேத்தரின் வரவில்லை. அவள் போய்விட்டாள்,” என்று கண் கலங்கியபடி சகோதரி ஜெரார்ட் சொன்னார். இது போல பல கைதிகளைப் பார்த்த சகோதரி ஜெரார்டுக்கு மன ஆதரவு அளிப்பது அவரைப் போன்ற இதர கன்னியாஸ்திரிகள்தான்.

“அனைவரும் ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். ஆனால் அந்த நாள் எப்பொழுது வரும் என்று முன்கூட்டியே தெரிவது மரண தண்டனைக் கைதிகளுக்கு மட்டும்தான்.

அச்சம் அவர்களைக் கவ்விக்கொண்டாலும், கைதிகள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்,” என்று கூறிய சகோதரி ஜெரார்டின் முகத்தில் ஒரு விதப் பரிவு தென்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!