லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்; சைக்கிளோட்டி மாண்டார்

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்; சைக்கிளோட்டி மாண்டார்

1 mins read
f5a4f1d8-7d8f-459c-a250-eba63c9ffbb6
விபத்தில் படுகாயம் அடைந்த மோட்டார் சைக்கிளோட்டி மருத்துவமனையில் உயிரிழந்தார். - படம்: டிராஃபிக் எக்சிடன்ட்ஸ் .எஸ்ஜி/ஃபேஸ்புக்

துவாஸ் வட்டாரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 30 வயது மோட்டார் சைக்கிளோட்டி மாண்டார்.

இந்தச் சம்பவம் மார்ச் மாதம் 27ஆம் தேதியன்று துவாஸ் சோதனைச்சாவடியை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் மாலை 5.40 மணி அளவில் நிகழ்ந்தது.

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதை அடுத்து, மோட்டார்சைக்கிளோட்டி படுகாயம் அடைந்தார்.

அந்த ஆடவரை இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

ஆனால் அவர் பிறகு மருத்துவமனையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து சம்பந்தப்பட்ட 27 வயது லாரி ஓட்டுநரிடம் காலவ்துறை விசாரணை நடத்துகிறது.

குறிப்புச் சொற்கள்
சாலை விபத்து