ஏப்ரல் 1 முதல் போட்டித்தன்மை ஆணையத்துக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரி

ஏப்ரல் 1 முதல் போட்டித்தன்மை ஆணையத்துக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரி

1 mins read
2c05d22d-f080-4309-a96b-1dd3978f0504
அரசு கொள்முதல், அலுவலகக் குற்றச்செல்கள் தொடர்பாக அரசாங்க வழக்கு விசாரணையை மேற்கொள்வது, தொழிலாளர் சட்டம், போட்டித்தன்மை சட்டம் போன்றவற்றில் பரந்த அனுபவம் உடையவர். - படம்: வர்த்தக, தொழில் அமைச்சு

மனிதவள அமைச்சின் முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரி ஆல்வின் கோ எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சிங்கப்பூர் போட்டித்தன்மை, வாடிக்கையாளர் ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.

திரு ஆல்வின் கோ, திருவாட்டி சியா அய்க் கோருக்குப் பதிலாக அந்தப் பொறுப்பை ஏற்க உள்ளார். திருவாட்டி சியா ஏப்ரல் 1ஆம் தேதி அரசு நீதிமன்றத்தில் தமக்கு அளிக்கப்பட்டுள்ள புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார் என்றும் தெரிவித்தக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையத்தில் போட்டித்தன்மை சட்டம், வாடிக்கையாளர் பாதுகாப்பு (நியாய முறை வர்த்தகம்) சட்டம் ஆகியவற்றை பரிபாலிப்பது, அமல்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்துவார். அத்துடன், அரசு, பொதுத் துறை அமைப்புகளுக்கு போட்டித்தன்மை, வாடிக்கையாளர் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்குவது ஆகியவற்றிலும் கவனம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த திரு கோவுக்கு அரசு கொள்முதல், அலுவலகக் குற்றச்செல்கள் தொடர்பாக அரசாங்க வழக்கு விசாரணையை மேற்கொள்வது, தொழிலாளர் சட்டம், போட்டித்தன்மை சட்டம் போன்றவற்றில் பரந்த அனுபவம் உள்ளது என்று ஆணையம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்