தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரமலான் அலங்கரிப்பில் ரயில்கள், பேருந்துகள்

1 mins read
27e327a0-2add-4269-a2ab-0bae4e3c55b8
ரமலான் பண்டிகைக்காக மார்ச் 27ஆம் தேதி முதல் மே 7ஆம் தேதி வரை சில ரயில்களும் பேருந்துகளும் சிறப்பு அலங்கரிப்பில் மிளிரவுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ரமலான் பண்டிகைக்காக மார்ச் 27ஆம் தேதி முதல் மே 7ஆம் தேதி வரை ரயில்களும் பேருந்துகளும் சிறப்பு அலங்கரிப்பில் மிளிரவுள்ளன.

அலங்காரங்கள் ரமலான் கருப்பொருளில் இருக்கும்.

நிலப் போக்குவரத்து ஆணையமும் பொது போக்குவரத்து நிறுவனங்களான எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி, கோ அகெட் ஆகியவையும் இணைந்து இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளன.

இதற்கு மலாய் மரபுடைமை நிலையமும் உதவியுள்ளது.

ஆறு ரயில் பாதைகளில் உள்ள சில ரயில்களில் ரமலான் கருப்பொருளில் இருக்கும் அலங்காரங்களைக் காணலாம்.

7, 12, 70, 99, 960 எண்களைக் கொண்ட சில பேருந்துகளிலும் அலங்காரங்களைப் பார்க்கமுடியும். இந்த பேருந்துகள் கேலாங் சந்தை, பூன்லே, கிளமெண்டி, தெம்பனிஸ், பிடோக் உள்ளிட்ட வட்டாரங்களில் பயணம் செய்பவை.

அங் மோ கியோ, லிட்டில் இந்தியா, பாய லேபார், பூகிஸ், பூன்லே, உட்லண்டஸ், தெம்பனிஸ் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரமலான் பண்டிக்கைக்கான சிறப்பு உணவுகள், தகவல்கள் பற்றிய அலங்காரங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

ரமலான் கருப்பொருளில் உள்ள அலங்காரப் படங்களைப் பொதுமக்கள் சமூக ஊடகங்களிலும் பகிர்ந்துவருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்