காலாங் ரிவர்சைட் பார்க் ஆற்றில் 58 வயது மாதின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

காலாங் ரிவர்சைட் பார்க் ஆற்றில் 58 வயது மாதின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

1 mins read
9dad7b9e-8412-4e5b-9315-6a4fedac72af
ஆற்றில் மிதந்துகொண்டிருந்த சடலத்தை அதிகாரிகள் மீட்டனர். - படம்: ஷின்மின்

காலாங் ரிவர்சைட் பார்க் ஆற்றில் மார்ச் 30ஆம் தேதியன்று சடலம் ஒன்று மிதந்துகொண்டிருந்தது.

இதுகுறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் சடலத்தை மீட்டனர்.

மாண்டவர் 58 வயது மாது என்று தெரியவந்துள்ளது.

ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், மாதின் மரணத்தில் எந்த ஒரு குற்றச் செயலும் சந்தேகிக்கப்படவில்லை.

இதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்