ஏப்ரல், மே மாதங்களில் வெப்பம் அதிகரிக்கலாம்: நிபுணர்கள்

இதுவரை அனுபவித்த வெப்பகாலத்தைக் காட்டிலும் ஏப்ரல், மே மாதங்களில் மேலும் கடுமையான வெப்பத்தை நாம் உணரக்கூடும் என்று நிபுணர்கள் முன்னுரைத்துள்ளனர்.

இந்த இரு மாதங்களும் பொதுவாகவே ஆண்டின் ஆக வெப்பமான மாதங்களாக இருந்து வந்துள்ளன.

இதற்கிடையே, ‘எல் நினோ’ நிகழ்வு 2023ஆம் ஆண்டின் பிற்பாதியிலிருந்து சிங்கப்பூரை வாட்டிவருகையில் அதன் தாக்கம் வெப்பநிலையை மேலும் உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடலின் மேல்பரப்பு வெப்பநிலையிலும் பசிபிக் பெருங்கடலின் மேல் வீசும் காற்றிலும் மாற்றங்கள் ஏற்படும்போது தென்கிழக்காசியாவில் மேலும் வெப்பமான வானிலை நிலவுவதே இயல்பாக நிகழும் இந்த ‘எல் நினோ’ பருவநிலை நிகழ்வு.

இருப்பினும், இந்த ‘எல் நினோ’ பாதிப்பு வலுவிழந்து வருவதாகவும் ஏப்ரல் அல்லது மே வாக்கில் அது குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டது.

ஆனால், கடல் மட்டத்திலிருந்து காற்று மண்டலத்திற்கு வெப்பம் மாறுவதற்கு நேரம் எடுப்பதால் வழக்கமான வெப்பநிலையைக் காட்டிலும் சற்று அதிகமான வெப்பநிலை வரும் மாதங்களில் நீடிக்கக்கூடும் என்று நிபுணர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் விளக்கம் அளித்தனர்.

எனவே, வழக்கமாக சிங்கப்பூரில் ஆக வெப்பமானதாக விளங்கும் மாதங்களில் ‘எல்-நினோ’வின் தாக்கமும் இணைவதை உணரக்கூடும்.

சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள்படி, ஆண்டின் ஆக வெப்பமான மாதம் மே. தினமும் சராசரியாகப் பதிவாகும் வெப்பநிலை 28.6 டிகிரி செல்சியலாக இருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!