தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் ஆகப்பெரிய நிதி மோசடி வழக்கில் சிக்கியவர் மீது புதிய குற்றச்சாட்டுகள்

2 mins read
57bc8c53-914a-411e-9ab4-d40042c3ff20
சூ ஹாய்ஜின் மீது பத்து புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. - படம்: வீசாட்

சிங்கப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மூன்று பில்லியன் வெள்ளி மதிப்பிலான ஆகப் பெரிய நிதி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சூ ஹாய்ஜின்னும் ஒருவர்.

அவர் மீது ஏப்ரல் 1ஆம் தேதி 12 புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அவற்றில் மூன்று வாங் ஜுன்ஜிக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டுகளாகும்.

யிஹாவ் சைபர் டெக்னாலஜிஸின் மொத்த லாபம், வர்த்தக வரவுகள் தொடர்பாக சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் வாங் ஜுன்ஜி தவறாகப் பிரதிதிக்க அவர் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.

இந்தக் குற்றச்செயல்கள் 2020க்கும் 2022க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டு நிதியாண்டுக்காக மே 2022ல் மனிதவள அமைச்சிடம் வாங் ஜுன்ஜி தவறாகப் பிரதிநிதிக்கவும் சூ உதவியதாகச் சொல்லப்படுகிறது.

மேலும் 2022ஆம் ஆண்டில் டிபிஎஸ், ஒசிபிசி, யுஓபி வங்கிகளுக்கு ஹியாவ் நிறுவனத்தின் போலி நிதி அறிக்கைகளை சமர்பிக்க அவர் வாங் உடன் இணைந்து சதி செய்ததாகவும் மற்ற மூன்று குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.

யியாவ் நிறுவனத்துக்கு வங்கிக் கணக்கு திறப்பதற்காக சூவின் விண்ணப்பத்துக்கு ஆதரவாக 2021ஆம் நிதியாண்டுக்கான இத்தகைய நிதி அறிக்கைகள் டிபிஎஸ், யுஒபி வங்கிகளுக்கு சமர்பிக்கப்பட்டன.

ஒசிபிசி சம்பவத்தில் வங்கியின் முதன்மை தனியார் வாடிக்கையாளராக சேர்வதற்கு சூ முயன்றதாகவும் சொல்லப்படுகிறது.

பண மோசடி விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட பத்து பேரில் மூன்று பேருடன் தொடர்புடைய ஒன்பது நிறுவனங்களில் திரு வாங் பதவி வகித்ததாக முன்னதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்
நிதி மோசடி