சிங்கப்பூர் ஹோட்டல் அறைகளின் சராசரி கட்டணம் பிப்ரவரியில் அதிகரிப்பு

சிங்கப்பூருக்கு வரும் அனைத்துலகப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதால், ஆண்டு அடிப்படையில் பிப்ரவரியில் சிங்கப்பூர் ஹோட்டல் அறைகளின் சராசரி கட்டண விகிதம் அதிகரித்திருப்பதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்தது.

பிப்ரவரி மாதம் ஹோட்டல் அறைகளின் சராசரி கட்டண விகிதம் 6.7% அதிகரித்து S$298.47 ஆனது. அதற்கு முந்தைய மாதத்தில் அந்த கட்டணம் S$279.78 ஆக இருந்தது. ஆண்டு அடிப்படையில் பார்த்தால் அது 9% அதிகம்.

ஒட்டுமொத்த ஹோட்டல் அறை வருமானம், கிடைக்கும் அறையின் மூலம் கிட்டும் வருமானம், ஹோட்டலில் தங்குவோரின் சராசரி விகிதம் ஆகியவையும் பிப்ரவரியில் உயர்ந்தது.

ஜனவரியில் 1,436,411 ஆக இருந்த சுற்றுப்பயணிகளின் வருகை பிப்ரவரியில் 1,436,571 என சற்று உயர்ந்தது. இந்தோனீசியாவை முந்திக்கொண்டு சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த சுற்றுப்பயணிகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது. முதல் ஐந்து இடங்களில் இருந்த இந்தியா 5ஆம் இடத்துக்குக் கீழ் சரிந்தது.

சிங்கப்பூர் ஹோட்டல் அறைகளின் ஒட்டுமொத்த வருமானம் பிப்ரவரியில் 7.3% அதிகரித்து S$453.8 மில்லியன் ஆனது. ஜனவரியில் அந்த வருமானம் S$423.1 மில்லியனாக இருந்தது. ஆண்டு அடிப்படையி்ல பார்த்தால் அது 29.8% அதிகரிப்பு.

ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்தோரின் ஜனவரி மாத விகிதம் 77.6%. பிப்ரவரியில் அந்த விகிதம் 83%. ஆண்டு அடிப்படையில் பார்க்கும்போது அது சிறிதளவு சரிவு.

இருப்பினும், 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அது கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பிருந்த விகிதமான 83 விழுக்காட்டுடன் அது ஒத்திருந்தது.

ஆண்டு அடிப்படையில், சிங்கப்பூர் ஹோட்டல் அறைகளின் சராசரி கட்டண விகிதம் 5.9% கூடி S$289.15 ஆனது. அறைகள் மூலம் கிடைத்த ஒட்டுமொத்த வருமானம் S$876.83 மில்லியன். இது 31.3% உயர்வு.

மாத அடிப்படையில் பார்க்கும்போது, குடியரசுக்கு வந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால். ஹோட்டல்களின் செயல்பாடுகளும் ஏற்றம் கண்டன.

ஜனவரியில் சிங்கப்பூருக்கு வந்த சீனாவின் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை 211,194. அது பிப்ரவரியில் 326,967 என்று உயர்ந்தது. ஜனவரியில் இந்தோனீசியாவிலிருந்து வந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 268,972 என்று இருந்தது. ஆனால் அது பிப்ரவரியில் 190,757 ஆகக் குறைந்தது.

பிப்ரவரியில் சிங்கப்பூருக்கு வந்த சுற்றுப்பயணிகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தை மலேசியாவும் (100,200 பேர்) நான்காம் இடத்தை ஆஸ்திரேலியாவும் (79,572 பேர்) பெற்றன. 2020க்குப் பிறகு பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பெற்றது பிரிட்டன் (69,918 பேர்). ஜனவரி பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருந்த இந்தியா பிப்ரவரியில் ஏழாம் இடத்துக்கு இறங்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!