வட்டி விகிதத்தை குறைக்கும்ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி

வட்டி விகிதத்தை குறைக்கும்ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி

1 mins read
1e294b48-a7a6-4189-a82f-9008c5c781e5
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, போனஸ்சேவர் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, அதன் ‘போனஸ்சேவர்’ கணக்குகளுக்கான அதிகபட்ச வட்டி விகிதத்தை மே 1ஆம் தேதியிலிருந்து ஆண்டுக்கு 7.68 விழுக்காட்டுக்குக் குறைக்கிறது.

அவ்வங்கியின் இணையத்தளத்தை கவனித்ததில் இத்தகவல் வெளியாகியிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

இது, சேமிப்புக் கணக்குகளுக்கு முன்பு வழங்கப்பட்ட 7.88 விழுக்காடு வட்டி விகிதத்தைவிட சற்றுக் குறைவாகும்.

மேலும் போனஸ் வட்டி விகிதத்தைப் பெறுவதற்கு சில விதிமுறைகளை வாடிக்கையாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

குறைந்தது $3,000 சம்பளத்தை சேமிப்புக் கணக்கில் போட வேண்டும், அந்த வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட அட்டையை செலவுக்குப் பயன்படுத்த வேண்டும், முதலீடு, கட்டணம் செலுத்துவது போன்ற பரிவர்த்தனைகளை செய்ய வேண்டும் உள்ளிட்டவை விதிமுறைகளில் சில.

மேலும் முதல் 100,000 வெள்ளி சேமிப்புக்கு போனஸ் வட்டி விகிதம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய சீரமைப்புக்குப் பிறகு ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் வாடிக்கையாளர்கள் வருடத்திற்கு 0.6 விழுக்காடு வரை வட்டி விகிதத்தைப் பெறுவார்கள். இதற்கு குறைந்தது மாதம் 500 வெள்ளியை போனஸ்சேவர் பற்று அல்லது கடன் அட்டை மூலம் செலவுகளை செய்ய வேண்டும். இந்த வட்டி விகிதம் இதற்கு முன்பு 1.25 விழுக்காடாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்