மின்னிலக்க கட்டண வில்லை:பாதுகாப்பை வலுப்படுத்தும் நாணய ஆணையம்

மின்னிலக்க கட்டண வில்லை:பாதுகாப்பை வலுப்படுத்தும் நாணய ஆணையம்

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

02 Apr 2024 - 7:43 pm

1 mins read

சிங்கப்பூர் நாணய ஆணையம் (மாஸ்), மின்னிலக்கக் கட்டண வில்லை (Digital Payment Token) சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி கள்ளப்பணத்தை நல்லப் பணமாக மாற்றுவது, பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பது உள்ளிட்டவற்றுக்கு அத்தகைய நிறுவனங்கள் பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கும்.

ஏப்ரல் 2ஆம் தேதியன்று மத்திய வங்கியின் விதிமுறைகளின்கீழ் கட்டணச் சேவைகளின் நோக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தோடு கட்டண சேவைகள் சட்டம் மற்றும் அதன் துணைச் சட்டங்களில் மாஸ் திருத்தங்களை செய்தது.

பயனீட்டாளர் பாதுகாப்பு மற்றும் மின்னிலக்க கட்டண சேவை வழங்குவோரின் நிதி நிலை தொடர்பான தேவைகளை அமல்படுத்த வேண்டும் என்று புதிய நடைமுறைகள் குறித்து மாஸ் விளக்கமளித்தது.

குறிப்புச் சொற்கள்